பரிசு வழங்க அலைந்த வட்ட வழங்கல் அலுவலர் மாரடைப்பால் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரிசு வழங்க அலைந்த வட்ட வழங்கல் அலுவலர் மாரடைப்பால் சாவு

Added : ஜன 11, 2020

இடைப்பாடி: இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்தவர் சம்பத்குமார், 57. தமிழக அரசின், பொங்கல் பரிசு தொகுப்பை, தாலுகாவிலுள்ள, 135 ரேஷன் கடைகளுக்கும் வழங்க அலைந்தார். நேற்று, வெள்ளரிவெள்ளி, சித்தூர், பூலாம்பட்டி பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்றார். பின், அலுவலகம் வந்த அவர், மதியம், 3:30 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். அங்கிருந்த பணியாளர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் உயிரிழந்தார். சம்பத் குமாருக்கு, மனைவி ஜெயா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X