இரவில் ஊசி போட மறுப்பு: நோயாளிகள் பாதிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

இடைப்பாடி: அரசு மருத்துவமனையில், இரவில் ஊசி போட மறுப்பதால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இடைப்பாடியில் தாலுகா மருத்துவமனையில், 15க்கும் மேற்பட்ட மருத்துவர், 10க்கும் மேற்பட்ட செவிலியர் பணிபுரிகின்றனர். புறநோயாளியாக, தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இரவில், 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில், விசைத்தறி தொழிலில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர், உடலில் சத்து குறைபாட்டால், தினமும், இந்த மருத்துவ மனைக்கு வந்து ஊசி போட்டுக்கொண்டனர். ஒரு மாதமாக, இரவில் வரும் நோயாளிகளுக்கு, ஊசி போடுவதில்லை. குறிப்பாக, தலைவலி, விஷக்கடி போன்றவைக்கு, ஊசி போடாததால், நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, இடைப்பாடி அரசு மருத்துவ அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், ''ஊசி போடக்கூடாது என, அரசு உத்தரவு உள்ளது. சுற்றுவட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஊசி போடுவதில்லை. ஊசி போட வேண்டும் என கேட்டால், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு தான் ஊசிபோடமுடியும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X