பொது செய்தி

இந்தியா

மாணவர்கள் தற்கொலை : தமிழகத்திற்கு 2வது இடம்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (15)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பொங்களூரு : கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018 ம் ஆண்டில் 10,000 க்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டில் சராசரியாக 24 மணி நேரத்தில் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


தேசிய குற்றப்பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி, 2009 ஜன.,1 முதல், 2018 டிச.,31 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 81,758 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக 2018 ம் ஆண்டு மட்டும் 10,159 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2018 ல் 1.3 லட்சம் தற்கொலைகள் நடந்துள்ளது. இவற்றில் 8 சதவீதம் பேர் மாணவர்கள், 8 சதவீதம் பேர் விவசாயிகள், 10 சதவீதம் பேர் வேலையில்லாதவர்கள்.2018 ல் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலோனோர் தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள்.
குடும்ப சூழல் காரணமாக மனஅழுத்தத்திலேயே மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மனஅழுத்தம், பயம், மனநல பாதிப்பு பிரச்னைகள், போதைப் பொருட்கள் ஆகியன மாணவர்கள் தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வெளியில் செல்ல வழி இல்லாததால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

2018 ல் மாநில வாரியாக மாணவர்களின் தற்கொலையை பொருத்தவரை மஹாராஷ்டிரா (1448) முதலிடத்திலும், தமிழகம் (953) 2வது இடத்திலும் உள்ளன. ம.பி.,(862) 3வது இடத்திலும், கர்நாடகா (755) 4வது இடத்திலும், மேற்குவங்கம் (609) 5வது இடத்திலும் உள்ளன. 2014 முதல் 2018 வரை இந்த 5 மாநிலங்களுடன் சத்தீஸ்கரும் மாணவர்கள் தற்கொலை அதிகம் உள்ள மாநிலங்களில் இணைந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
11-ஜன-202020:17:51 IST Report Abuse
dandy திராவிட பகுத்தறிவு எருமைகளுக்கு தந்த பயிற்சி ..ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11-ஜன-202016:11:21 IST Report Abuse
Mirthika Sathiamoorthi என்னது படிக்கிற புள்ளைங்க தற்கொலை பண்ணுதுங்களா? ....நம்ப முடியலையே? கலிகாலம்..கல்கி அவதாரம் எடுக்கவேண்டிய அவசியம் வந்திடுச்சு..... சம்ஸ்கிருதம் பகவத்கீதை சொல்லிகொடுத்திருந்த எல்லோரும் சுபிட்சம் இருபானுங்க....காட்டு பயலுங்க இன்னும் பாடிகார்ட் முனீஸ்வரனையும், சுடல்மலை சாமியையும் கும்பிட்டுட்டு இந்துன்னு கூவுறானுங்க....ராமனை கும்பிடுங்கடா தற்கொலையே நெனைக்க தோணாது... ( சாமீ, எங்களை கோயிலுக்குள்ளே விடமாட்டாங்க.அப்புறம் எப்புடி ராமனை கும்பிடறது? ...டே சாமிதான் கும்பிட சொன்னேன் கோயிலுக்கு போய கும்பிட சொன்னேன்.. லோக்கல் சரக்கு போட்டு மூளை மழுங்கி போச்சு )
Rate this:
Share this comment
11-ஜன-202019:32:20 IST Report Abuse
chandranநல்ல ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில சேர்ந்துடு...
Rate this:
Share this comment
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12-ஜன-202008:28:33 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஉங்ககூட சேந்து எபபடி இருக்கமுடியும்?? அது அவ்ளவா மரியாதையா இருக்காது...வேற யோசனை சொல்லுங்க...
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
11-ஜன-202015:44:51 IST Report Abuse
Ashanmugam மானம், ரோஷம், வெட்கம், மனசாட்சி ஒன்று இருந்தால் தமிழக அரசு தலை குனிய வேண்டும். மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்ற செய்தி தமிழ் நாட்டில் தமிழக அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறது. தமிழக கல்வி அமைச்சரின் செயல் திட்டம் மகா கேவலமாக உள்ளது. நல்ல திட்டங்களுக்கு தமிழகம் முன்னிலையில் முதல் பேர் வரும் இடத்தில் " மாணவ சமுதாயம் தற்கொலையில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்ற செய்தி தமிழக அரசுக்கே அவப்பெயர்? இதுக்கெல்லாம் தமிழக எடப்பாடியார் அரசு கவலை படப்போவதில்லை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X