பொது செய்தி

இந்தியா

இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (77)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.





இந்தியாவிற்குள் ஊடுருவ சரியான நேரம் பார்த்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளது. பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு இந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளித்ததுடன், இவர்களின் யெல்பாடுகளையும் பாக்., ராணுவம் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.





இந்த பயங்கரவாதிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த குறிவைத்திருப்பதாக தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட இந்திய ராணுவ உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். பனிக்காலம் என்பதால் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் கோடையில் பனி உருகத் தொடங்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 50 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
15-ஜன-202021:09:20 IST Report Abuse
Sampath Kumar அய்யா கணக்கு எல்லாம் சரி தான் சும்மா சும்மா சொல்லி என்ன பிரயோசனம் ?? மக்களை உசுப்புஏதாவ ??
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-202009:03:09 IST Report Abuse
Mani . V அது எப்படி மிகச் சரியாக 300 தீவிரவாதிகள் என்று சொல்கிறீர்கள்? ஒருவேளை தலைப்பு, "இந்தியாவுக்குள் 300 தீவிரவாதிகளை அனுமதிக்க ஏற்பாடு தயார் அல்லது மும்மரம்" என்று இருந்தால் சரியாக இருந்திருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-202009:00:32 IST Report Abuse
sekar ng ஏன் இந்த செய்தியை பகிரங்கமாக வெளியிடுகிறார்கள் உளவுத்துறையினர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X