உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டோம்: ஈரான் ஒப்புதல்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (72)
Advertisement

இந்த செய்தியை கேட்க

தெஹ்ரான் : உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவ படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது. ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் பாக்தாத்தில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. விழுந்து நொருங்கிய விமானத்தில் ஈரான் நாட்டினர் 82 பேர் உள்ளிட்ட 176 பேர் பயணித்தனர்.

மனித தவறு காரணமாக உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் நாட்டு டிவி.,யில் செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொருங்கியதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஏவுகணை தாக்குதலால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. திட்டமிட்டு தங்கள் ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை எனவும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக கனடாவும், அமெரிக்காவும் எழுப்பிய சந்தேகத்திற்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜன-202021:35:08 IST Report Abuse
ஆப்பு ஏதோ காக்கா குருவி சுட்ட மாதிரி சொல்றாங்களே...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
11-ஜன-202020:59:12 IST Report Abuse
jagan "இது மார்க்கம் இல்லை மூர்க்கம்" என்று முதலில் பெயர் வைத்தவன் நான் தான் (2015 இல்ல 2014 இல் என்று நினைக்கிறன்). எல்லோரும் பயன் படுத்துவது மகிழ்ச்சியாய் இருக்கு . நன்றி தினமலர்
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
11-ஜன-202019:34:01 IST Report Abuse
Krishna There Seems To Be Some Clear But Later Understanding between Iran & US-Trump-May be US elections OR Europe Influence
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X