பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு அரவைக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை

Added : ஜன 11, 2020
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளதால், அரவைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அக்டோபரில் கரும்பு அரவை பணி துவங்கும். இப்பணியில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். பாலக்கோடு மற்றும் மல்லாபுரம், பெல்ராம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், திம்மம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், பெரியாம்பட்டி பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்த கரும்பை பதிவு செய்து, இந்த அரவை ஆலைக்கு கொடுத்து வந்தனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொய்த்து போனதால், நடப்பாண்டில், 15 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, கரும்பு பூ எடுத்துள்ளதால், மேலும் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவங்காததால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இந்த ஆலையில் அரவை துவங்க வேண்டும் அல்லது அரவை செய்யும் மாற்று ஆலைக்கு, அரசின் செலவிலேயே கரும்புகளை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X