பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு பெற அலைமோதிய பெண்கள் கூட்டம்

Added : ஜன 11, 2020
Advertisement

அரூர்: அரூரில், பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு, காலை முதலே ரேஷன் கடை முன், பெண்கள் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது.
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கார்டுகளுக்கு தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலக்காய், கரும்பு மற்றும் 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல், பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம், அரூர் சந்தைமேட்டில் செயல்பட்டு வரும், ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு நேற்று காலை, 5:30 மணி முதலே, பெண்கள் குவிந்தனர். தாங்கள் கொண்டு வந்த பைகளை வரிசையாக வைத்தனர். கடை திறந்தவுடன், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் எல்லோரும் முயன்றதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X