பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்பிய குழந்தைகள்

Added : ஜன 11, 2020
Advertisement

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, தேர்தல் முறைகேடுகளை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், வருவாய் துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின், தங்கள் குழந்தைகளை நேற்று பள்ளிக்கு அனுப்பினர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் யூனியன், பூமாண்டஹள்ளி பஞ்., தலைவர் தேர்தலில் கவிதா, மேக்னாம்பட்டியை சேர்ந்த கந்தையன் உள்பட நான்கு பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவு வெளியானபோது, மேக்னாம்பட்டியில் பதிவான ஓட்டுகள் செல்லாதவை என தெரிவிக்கப் பட்டதால், முறைகேடுகள் நடந்துள்ளன; மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என, அப்பகுதியினர் கடந்த, 3 முதல் ரேஷன் கடை அடைப்பு, கறுப்பு கொடி ஏற்றி போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த. 6 முதல், தீர்வு கிடைக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கும் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் கடந்த, 7ல் பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், வட்டார கல்வி அலுவலர் உமாதேவி ஆகியோர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது. 9ல் வருவாய்த்துறை சார்பில், தர்மபுரி சப்-கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்களின் கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகத்தில் மனுவாக கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; ரேஷன் கடையை திறக்க விடுங்கள் என்றனர். இதையேற்றுக்கொண்ட கிராமத்தினர், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொண்டனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் மேக்னாம்பட்டி துவக்கப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை நேற்று அனுப்பினர். அதன்படி, 52 பேரில், 42 மாணவர்கள் வருகை தந்ததாக கல்வித்துறையினர் தெரிவித்தனர். இதேபோல் அங்குள்ள ரேஷன் கடையும் நேற்று திறக்கப்பட்டு, பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X