பொது செய்தி

தமிழ்நாடு

10 ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்; பலத்த பாதுகாப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 10 ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு, இன்று மறைமுக தேர்தல் நடப்பதால், பி.டி.ஓ., அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரு கட்டங்களாக நடந்த உள்ளாட்சி தேர்தலில், 333 பஞ்., தலைவர்கள், 3,009 கிராம பஞ்.,வார்டு உறுப்பினர்கள், 23 மாவட்ட கவுன்சிலர்கள், 221 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் கடந்த, 6ல் பதவியேற்று கொண்டனர். இந்நிலையில், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர், 10 ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கும், 333 பஞ்., துணை தலைவர் பதவிகளுக்கும் இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது. இதில், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை, தி.மு.க., கைப்பற்றுவது உறுதியாகி விட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கியுள்ள நிலையில் இந்த பதவி, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் தட்ரஅள்ளி நாகராஜன் மனைவி மணி மேகலைக்கு கிடைப்பது உறுதியாகிவிட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள, 10 ஒன்றியங்களில், கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தளி, பர்கூர், மத்தூர் ஆகிய ஒன்றியங்களில், தி.மு.க.,வும், ஓசூர், சூளகிரி ஆகிய ஒன்றியங்களில், அ.தி.மு.க.,வும் தலைவர் பதவியை பிடிப்பது உறுதியாகிவிட்டது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய நான்கு ஒன்றியங்களில் தலைவர் பதவியை நிர்ணயிப்பதில், சுயேச்சைகளின் பங்கு முக்கியமானதாக உள்ளதால், தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதை கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தலைவர் பதவியை பிடிக்க பல்வேறு யூகங்களை வகுத்துள்ளதால், தேர்தல் நடக்கும் அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் வளாகத்தில், கவுன்சிலர்களை தவிர கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், அனைத்து பஞ்., அலுவலகங்களில் நடக்கும், துணை தலைவர் பதவிக்கான தேர்தலில், தகராறு ஏற்படாமல் இருக்க அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X