பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கொட்டும் இடங்களில் கோலம் போட்டு விழிப்புணர்வு

Added : ஜன 11, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில், குப்பை கொட்டும் இடங்களில் கோலம் போட்டு, அங்கு சுவாமி படம் வைத்து குப்பை கொட்டாதவாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளிலும் வீடு மற்றும் கடைகளில் சேரும் குப்பையை, நகராட்சி பணியாளர்கள் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து சேகரித்து வருகின்றனர். இதில் மட்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி நகரை சுகாதாரமாக வைக்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பல இடங்களில் குப்பையை கொட்டி, மக்கள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில், தூய்மை பாரத பரப்புரையாளர்களால், குப்பை கொட்டும் இடங்களை கண்டறிந்து, அங்கு சென்று கோலம் போட்டு, சுவாமி படத்தை வைத்து குப்பை கொட்டாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி கமிஷனர் சந்திரா கூறியதாவது: பொதுவாக வீட்டின் முன்புறம், கோலம் போட்டிருந்தாலே குப்பை போட யோசிப்போம். இதை மனதில் வைத்து, குப்பை கொட்டு இடங்களில் கோலம் போட்டு வருகிறோம். குறிப்பாக, அந்த இடத்தில் சுவாமி படங்களை வைப்பதால் பெரும்பாலான வர்கள், அந்த இடத்தை கோவிலாக பார்த்து செல்கின்றனர். மேலும், அந்த இடத்தில் குப்பை தேங்குவதால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளோம். இதன் மூலம், தெருக்களில் குப்பை கொட்டுவது குறைந்தால், அது கடவுளுக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X