பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பிக்க வயது வரம்பு உயர்வு

Added : ஜன 11, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில், விண்ணப்பிக்க வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மகளிர், பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல, இரு சக்கர வாகனம் வாங்க, மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக கடந்தாண்டு செப்டம்பர், 20 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தற்போது பயனாளிகளின் வசதிக்காக இத்திட்டத்தின் கீழ் இதுவரை, 18 வயது முதல், 40 வயது வரை என்று இருந்த வயது வரம்பை, 18 முதல், 45 வயது வரை என உயர்த்தி அதிகளவில் மகளிர் பயன்பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மகளிரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சத்து, 50 ஆயிரத்து மிகாத அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அமைப்புசாரா மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள், நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையோர் என விரிவுப்படுத்தி திருத்திய உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் பி.டி.ஓ., அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து டவுன் பஞ்., அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கி பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X