சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாரஸ் லாரி மோதி பைக்கில் சென்ற விவசாயி பலி

Added : ஜன 11, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, டாரஸ் லாரி மோதிய விபத்தில், பைக்கில் சென்ற விவசாயி பலியானார். கிருஷ்ணகிரி அடுத்த, மல்லிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் வேணுகோபால், 59. இவரும், அதே ஊரை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், 60, என்பவரும் ஸ்பிளண்டர் பைக்கில், கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர். சின்னேப்பள்ளி என்ற இடத்தில் இரவு, 8:30 மணிக்கு சென்ற போது, பின்னால் வந்த டாரஸ் லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த வேணுகோபால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X