பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 152 நாளாக 100 அடிக்கு மேல் நீடிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், தொடர்ந்து, 152 நாளாக, 100 அடிக்கு மேல் நீடிக்கிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், நீர்வரத்து அதிகரித்து, கடந்த ஆக., 12ல், 92 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 13ல், 101 அடியாக உயர்ந்தது. கடந்த செப்., 23ல் அணை நிரம்பியது. நேற்று, பாசனத்துக்கு வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 1,029 கனஅடி நீர் வந்தது. வரத்தை விட, வெளியேற்றம் கூடுதலாக இருப்பதால், நேற்று முன்தினம், 114.33 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 113.76 அடியாக சரிந்தது. எனினும், தொடர்ந்து, 152 நாளாக, நீர்மட்டம், 100 அடிக்கு மேல் நீடிக்கிறது.

கமாண்டோ பாதுகாப்பு படை: துணை தளபதி ராஜேந்திரன் தலைமையில், 10 பேர் அடங்கிய, தமிழ்நாடு கமாண்டோ பாதுகாப்பு படையினர், நேற்று காலை, மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இடதுகரை, வலதுகரை, அணை மின் நிலையம், சுரங்க நிலையங்களை பார்வையிட்ட குழுவினர், அணையின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X