சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது

Added : ஜன 11, 2020
Advertisement

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளியில், 100 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெண்கள் மொபைல் போனுக்கு, ஆபாச வீடியோ படம் வந்தது. இது குறித்து அம்பலூரை சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, நாட்றம்பள்ளி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், சென்னை குரோம்பேட்டையில் இருந்து ஆபாச வீடியோ படம் அனுப்பப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில், போலீசார் குரோம்பேட்டையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் மொபைல் போனில், பேசிக்கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பெண்களுக்கு ஆபாச படம் அனுப்பிய வினோத், 24, என்பதும், தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டை முள்ளிகுளத்தை சேர்ந்தவர் என்றும், டிப்ளமோ படித்த அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: குரோம்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தவற விட்ட மொபைல் போனை வினோத் வைத்துக்கொண்டு, அதிலுள்ள ட்ரூ காலரில் வரும் பெண்கள் மொபைலுக்கு, ஆபாச வீடியோ படங்கள் அனுப்பி வந்தார். பெண் குரலில், ஆபாசமாக பேசி வந்துள்ளார். பல பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதுவரை, 100 பெண்களுக்கு ஆபாச வீடியோ படம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X