சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வீட்டில் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

Added : ஜன 11, 2020
Advertisement

ஓசூர்: ஓசூரில், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
ஓசூர், நேரு நகர், வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் நரேந்திரன், 56; பா.ஜ., கட்சியின் மாநில பொதுச்செயலாளர். இவரது மனைவி மணிமேகலை, 52. இவரது மகள்கள் இருவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். இரண்டாவது மகள் ஷர்மிளாவிற்கு குழந்தை பிறந்துள்ளதால், நரேந்திரன் மனைவி மணிமேகலை சென்னை சென்று விட்டார். பா.ஜ., கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, நரேந்திரன் கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதை அறிந்த மர்ம நபர்கள், நரேந்திரன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த, ஒன்பது பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய், பூஜை அறையில் இருந்த, ஏழு கிலோ ஐம்பொன் ஸ்ரீசக்கரம் ஆகியவற்றை திருடி சென்றனர். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய நரேந்திரன், வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் திருட்டு போனதை அறிந்த அவர், ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஓசூர் டி.எஸ்.பி., சங்கு தலைமையில், டவுன் இஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர். வீட்டில் இருந்த 'சிசிடிவி' கேமராவில், மர்ம நபர்கள் இருவர்கள் வீட்டிற்குள் வந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இதை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். நரேந்திரன் வீட்டில் திருட்டு நடந்ததை அறிந்த, பா.ஜ., கட்சியினர் அவரது வீட்டின் முன் திரண்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாரை வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X