பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் பகுதியில் மூடுபனி: கடும் குளிரில் மக்கள் தவிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

ஓசூர்: ஓசூர் பகுதியில் நேற்று காலை வரை மூடுபனி தென்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் நகரம், மலையின் சமதள பரப்பில் அமைந்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளை காட்டிலும், சீதோஷண நிலையில் பெரிய அளவில் மாற்றம் உள்ளது. ஆண்டுதோறும் நவம்பரில் இருந்து, பிப்ரவரி வரை, கடும் குளிர் நிலவும். கடந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை காட்டிலும் சற்று பனியின் தாக்கம் குறைவாக உள்ளது. ஆனால், நேற்று காலை, 8:00 மணிக்கு மேலாகியும், அதிகளவு மூடுபனி தென்பட்டதால், பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் சிரமப்பட்டனர். காலை, 8:00 மணிக்கு கூட, சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலை முழுமையாக பார்க்க முடியாத அளவிற்கு மூடுபனி காணப்பட்டது. சாலையே தெரியாத அளவிற்கு மூடுபனி தென்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். வாகன ஓட்டிகள் தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களை, மிக அருகில் சென்ற பின் தான் கவனிக்க முடிந்தது. இரவு நேரங்களில், 16 டிகிரி மற்றும் அதற்கு மேல் வெப்பம் இருந்தால், குளிரின் தாக்கம் தெரியாது. ஆனால், ஓசூரில் நேற்று அதிகாலை, 14 ல் இருந்து, 12 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை சென்றதால், கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்தது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X