இன்று ஒரே மேடையில் மோடி - மம்தா

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (9+ 10)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கோல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.







மம்தா பானர்ஜி தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியும் வருகிறார். இந்நிலையில் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கோல்கட்டா செல்ல உள்ளார். பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காபே ஹவுஸ் மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. கோல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் மோடி, மம்தா பானர்ஜியுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார்.





பிரதமரின் வருகைக்கு எதிராக கோல்கத்தாவில் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தனது மேற்குவங்க பயணம் தொடர்பாக மோடி பதிவிட்டுள்ள டுவீட்டில், இன்றும், நாளையும் மேற்குவங்கம் செல்ல மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். ராமகிருஷ்ணா மிஷனில் நேரத்தை செலவிட ஆர்வமாக உள்ள நான், சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்க உள்ளேன். இது அந்த இடத்திற்கே உரிய சிறப்பு. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்கத்திற்கு வரும் பிரதமரை, ராஜ்பவனில் தங்க வரும்படி மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமரையும், மத்திய அரசையும் கடுமையாக மம்தா விமர்சித்து வரும் நிலையில், மோடியும் மம்தாவும் 2 நிகழ்ச்சிகளில் ஒரே மேடையில் சந்தித்து கொள்ள உள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murthy - chennai,இந்தியா
11-ஜன-202021:12:43 IST Report Abuse
murthy "இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை. நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை நாம் நம்புகிறார்கள். அனைத்தையும் நம்புகிறார்கள். அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்றுள்ளது. 99 சதவீத கிராமங்களில் கழிப்படை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்ததையும் நம்புகிறார்கள்" என்று சிதம்பரம் எப்படி நம் மக்களை பற்றி அப்பட்டமாக எத்தனை நாடுகளில் கணக்கு வைத்திருக்கவில்லை என்று சொல்வதை நம்பூஜிபிறோம் என்பதையே கூறுகிறார்
Rate this:
Share this comment
Cancel
murthy - chennai,இந்தியா
11-ஜன-202021:07:40 IST Report Abuse
murthy மத்திய அரசாங்கத்தால் இயற்றப்படும் நாடு முழுவத்துக்குமான பாதுக்கப்புக்கானதென்றால் அந்த சட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பதை சட்டத்தினை முழுவதுமாக படித்தவர் போலும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜன-202015:44:58 IST Report Abuse
இந்தியன் kumar சிங்க பெண் வருமதேர்தலில் அசிங்கமாகி விடுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X