கொச்சி மாராடு குடியிருப்பு: 350 பிளாட் நொடியில் துாள் துாள்!

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கொச்சி : கொச்சியில் விதிமீறி கட்டப்பட்ட மாராடு குடியிருப்பு வெடித்து தகர்க்கப்பட்டுள்ளது. 350 பிளாட்களை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு, 800 கிலோ வெடிபொருட்களை பயன்படுத்தி ஒரே நொடியில் தகர்க்கப்பட்டுள்ளது.



latest tamil news


கேரளாவில், கொச்சி, மாராடு அருகே 4 அபார்ட்மென்டுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி, கட்டப்பட்டதாக, புகார் எழுந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 350 வீடுகளை இடித்து தரைமட்டமாக்க, கடந்தாண்டு மே மாதம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இடிக்கும் பணியை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டிய கட்டாயம், மாநில அரசுக்கு ஏற்பட்டது. இதையடுத்து வீடுகளை இடிப்பதற்கான மேல் நடவடிக்கைகள் குறித்து பி.இ. எஸ். ஓ. எனப்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த குழுவினர் கட்டடத்தை ஆய்வு செய்தனர்.


latest tamil news


முன்னதாக எர்ணாகுளம் மாவட்ட மாஜிஸ்திரேட், கலெக்டர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட மாஜிஸ்திரேட் தடையில்லா சான்று அளித்துள்ளார். இதையடுத்து இன்று (ஜன. 11) காலை 11.20 மணிக்கு 800 கிலோ வெடி பொருட்களை பொருத்தி, கட்டிடத்தை தகர்க்கும் பணி துவங்கியது. ஜன.12-ம் தேதி பணிகள் முழுமையாக நிறைவடையும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கினறன. முன்னதாக குடியிருப்பை சுற்றியுள்ள மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கட்டடத்திலிருந்து 200 மீ தொலைவிற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்டிடம் இடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-202011:17:19 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை அப்புரூவல் குடுத்த அதிகாரிகளையும் கட்டடத்துக்குள்ள கட்டி போட்டுருக்கோணும்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
12-ஜன-202009:49:38 IST Report Abuse
Girija இந்த புத்தம் புது கட்டிடங்களை ராணுவம் பேரிடர், வானிலை மற்றும் போலீஸ் பயன்பாட்டிற்கு உதாரணமாக ஆளில்லா கண்காணிப்பு, காமிரா, ராடார், போன்ற கருவிகளை நிறுவ கையகபடுத்தி இருக்கலாம். எதற்கு இந்த கொலவெறி ? முப்பது கோடி ருபாய் செலவில் அதுவும் காற்று மாசுடன் ?
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
12-ஜன-202009:26:10 IST Report Abuse
K.ANBARASAN இந்த மாதிரி உத்தரவு தமிழ்நாட்டிற்கு வந்தால் சென்னையில் பாதி கட்டிடம் இருக்காதே கொடைக்கானல் ஊட்டி மதுரை கோவை இதர மாவட்டங்களையும் சேர்த்தால் .ஒரு பத்தாயிரம் கட்டிடம் தேறும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X