நிர்பயா குற்றவாளிகள் மனு: ஜன.,14ல் விசாரணை

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (12)
Advertisement
Nirbhaya, supremecourt,sc,  deathpenality, நிர்பயா, உச்சநீதிமன்றம், வினய்குமார், முகேஷ், விசாரணை, சுப்ரீம்கோர்ட்,  தூக்குதண்டனை,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் வினய் குமார் சர்மா மற்றும் முகேஷ் ஆகியோர், தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குறை தீர் மனு மீது வரும் 14ல் விசாரணை நடக்க உள்ளது.
கடந்த 2012 ல் 'நிர்பயா' என்ற மருத்துவ மாணவி டில்லியில் ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதில் கைதான 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை டில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார். சீராய்வு மனுவும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. நான்கு பேருக்கும், வரும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, திஹார் சிறையில் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.







இந்நிலையில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவரான வினய் குமார் சர்மா மற்றும் முகேஷ் ஆகியோர், தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, 'கியூரேட்டிவ்' மனு எனப்படும், குறை தீர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 14 ம் தேதி உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
11-ஜன-202020:10:02 IST Report Abuse
Swaminathan Chandramouli யாரோ நம் நீதியரசர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் போல் தெரிகிறது ,
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202018:20:57 IST Report Abuse
Babu கூலிப்படைகளை மக்கள் நாட யார் காரணம்?
Rate this:
Share this comment
Cancel
சின்ன சுடலை, Boat house இந்த அப்பாவிகளுக்கு நீதி வேண்டி வருகிற 25ஆம் தேதி மாநில அளவில் போராட்டம் நடத்த அனைத்து இளைஞர்களும் மாணவர்களும் வாரீர். இப்படிக்கு ~ இளைஞர் அணி தலைவர், சின்ன சுடலை©
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X