சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் மோதல்: போலீஸ் மண்டை உடைந்தது

Added : ஜன 11, 2020
Advertisement


ஆத்தூர்: சேலம், ஆத்தூர் அருகேயுள்ள கெட்டாம்பாடி ஊராட்சி துணை தலைவர் தேர்தல் இன்று(ஜன.,11) நடந்தது. 9 வார்டு மெம்பர்களை கொண்ட இந்த ஊராட்சியில், சுரேஷ் என்பவருக்கு ஆதரவாக 6 பேரும், நவீன் என்பவருக்கு ஆதரவாக 3 பேரும் உள்ளனர். நவீனின் ஆதரவாளர்கள், அடியாட்கள் உருட்டு கட்டையுடன் வந்து சுரேஷ் ஆதரவாளர்களை மிரட்டினர். பொது மக்களை விரட்டினர். அங்கிருந்த சேர்கள், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அவர்கள் கல்வீசியும் தாக்கினர். இதில் போலீஸ் ஏட்டு மண்டை உடைந்தது. மேலும் பஞ்சாயத்து தலைவர் மற்றும் சதிஷ்குமார், அழகேசன் என்ற கவுன்சிலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X