பொம்மாலாட்டத்திற்கு உயிர் கொடுப்போம்...

Added : ஜன 11, 2020
Share
Advertisement
 பொம்மாலாட்டத்திற்கு உயிர் கொடுப்போம்...

ஒரு காலத்தில் மக்களை மகிழ்விக்கும் கலைகளில் ஒயிலாட்டம்,கரகாட்டம்,மயிலாட்டம்,பொம்மலாட்டம் போன்றவைகள் இருந்தன, இதில் தொன்மையான கலையாக பொம்மலாட்டம் இருந்து வந்தது.
சினிமாவின் கவர்ச்சி,இணையத்தின் வளர்ச்சி காரணமாக காணாமல் போய்க்கொண்டு இருக்கும் பல கலைகளில் பொம்மலாட்டக் கலையும் ஒன்றாகும்.
ஆனால் இந்த கலையை காப்பாற்றி வளரச்செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை சமீபத்தில் பார்த்த பொம்மலாட்டம் நிகழ்வு ஒன்று ஏற்படுத்தியது.
சென்னை திருவான்மியூர் கலாச்சேத்ராவில் பொம்மலாட்டம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.பெங்களூருவைச் சேர்ந்த ‛ரங்கபுத்லி' என்ற கலைக்குழுவினர்தான் பொம்மலாட்டத்தை நிகழ்த்தினர்.
கோலாட்டம்,பாம்பாட்டம்,குரங்காட்டம் என்று தனித்தனி ஆட்டங்களை நிகழ்த்தியவர்கள் பின்னர் நரகாசுரவதம் என்ற நாடகத்தையும் நடத்தினர்.திரைக்கு பின்னால் இருந்து கயிற்றில் கட்டி தொங்கவிட்ட வண்ண வண்ண மரப்பொம்மைகளை ஆடவிட்டும் ஒடவிட்டும் பறக்கவிட்டும் அவர்கள் வசனம் பேசியபடி நடத்திய இந்த பொம்மலாட்ட நிகழ்வு பார்த்த பெரியவர்களையும் சிறியவர்களைப் போல குதுாகலிக்கச் செய்தது.
பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கும் இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி ஊர் தோறும் கிராமம் தோறும் நடக்கவேண்டும் அப்போதுதான் இந்த கலையும் வாழும் இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்களும் வாழ்வர்.
_எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X