பொது செய்தி

இந்தியா

எந்த போருக்கும் தயார்: இந்திய ராணுவ தளபதி

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (56)
Advertisement

புதுடில்லி : நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையும் பலமாக உள்ளது. எந்தவிதமான போருக்கும் ராணுவம் தயாராக உள்ளதாகவும் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.






டில்லியில் இன்று (ஜன.,11)செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறுகையில், நாங்கள் எதிர்கால போர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சி அளித்து வருகிறோம். எந்த நேரத்தில், எந்த விதத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எண்ணிக்கை முக்கியமல்ல தரமே எங்களின் தாரக மந்திரம். பாதுகாப்பு பணியாளர்களுக்கான தலைவர் மற்றும் ராணுவ விவகாரங்களுக்கான துறை அமைப்பது பெரிய நடவடிக்கை. இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.





ராணுவத்தை பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்பிற்கு நாங்கள் எப்போதும் விசுவாசமாக இருக்கிறோம். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை எங்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. பூஞ்ச் பகுதியில் பாக்.,ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம்.

தகுந்த படைகளும் அவர்களை எதிர்த்து போரிடுவோம். ராணுவ நடைமுறைகளின்படி சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தக்க பதிலடி கொடுக்கப்படும். இதற்கு முன்பு இருந்ததை விட இந்திய ராணுவம் இப்போது பலமாகவும், சிறப்பாகவும் உள்ளது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க உத்தரவு கிடைத்தால் ராணுவம் உடனடியாக செயலில் இறங்கும். இது அனைத்தும் பார்லி.,யின் முடிவு. பார்லி., விரும்பினால் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவினுடையதாகும். அவசியம் ஏற்பட்டால் பாக்., ஆக்கிரப்பு காஷ்மீரில் மிகப் பெரிய ஆப்பரேஷனை துவக்க ராணுவம் தயாரக உள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பு/வெள்ளை - Chennai,இந்தியா
11-ஜன-202023:16:09 IST Report Abuse
கருப்பு/வெள்ளை இந்திய ராணுவம் கண்டிப்பாக COK & POK இரண்டையும் மீட்கும். COK வை மீட்க சொல்லும் அடிமைகள், சீனாவின் கட்டுப்பாடுகள் மட்டும் இந்தியாவில் வேண்டும் என்று கேட்காமல் இருப்பது ஏன்? சீனாவின் கட்டுப்பாடுகள் இந்தியாவில் இருந்தால் அந்த அடிமைகளுக்கு இக்கு கருத்து எழுதும் சுதந்திரம் கூட இருந்திருக்காது. இவர்கள் இன்னும் ஏன் வெட்கம் கெட்டு இந்திய ராணுவத்தின் பாதுகாப்பில் வாழ்கிறார்கள்? உண்ட வீட்டுக்கு ரெண்டாகம் நினைக்கும் விருந்தாளிகள்.
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
12-ஜன-202005:10:59 IST Report Abuse
selvaஅவ பண்டாரம்...
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
11-ஜன-202023:06:58 IST Report Abuse
Rajas இந்த எந்த போருக்கும் தயார் என்ற டயலாக்கிற்கு வர வர மதிப்பு இல்லாமல் போய் விட்டது. ஏன் அதிகாரிகள் பத்திரிகைகளிடம் பேசுகிறார்கள். ராணுவ அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் தானே இது வரை பத்திரிகைகளை சந்தித்து வந்தார்கள்.
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
12-ஜன-202005:12:12 IST Report Abuse
selvaஎன்ன தயார் ... தயிர் வடை...
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
11-ஜன-202021:55:26 IST Report Abuse
Raja அடேங்கப்பா. ராணுவ தளபதிக்கே அறிவுரை சொல்றதுக்கு எவ்வளவு மேதாவிகள் வர்றாங்க. ராணுவ வீரர்கள் தலையை பாக்கிகள் எடுத்தப்ப இங்குள்ள அரசியல் வியாதிகள் எதுவும் பொங்கவில்லை. இன்று நிலைமைதலைகீழ். பதிலடி நிச்சயம். அதனால்தான் பாக் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X