பொது செய்தி

தமிழ்நாடு

'தீவிரவாத செயல்களை அரசு நசுக்க வேண்டும்'

Added : ஜன 11, 2020
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, செல்வ விநாயகர் கோவிலில், இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில், வாழும் உறுப்பினர் காளியண்ணனின், 100வது பிறந்த நாள் விழாவை நடத்தி, மத்திய, மாநில அரசுகள் சிறப்பிக்க வேண்டும். கச்சத்தீவில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். களியக்காவிளையில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மதச்சாயம் பூச விரும்பவில்லை. ஆனால், தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருவதை இந்த சம்பவம் காட்டுகிறது. உயிரிழந்த சப் -இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு, ஐந்து கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். இது போன்ற தீவிரவாத செயல்களை இரும்புக்கரம் கொண்டு அரசு நசுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X