பொது செய்தி

தமிழ்நாடு

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி

Added : ஜன 11, 2020
Advertisement

நாமக்கல்: விபத்து இழப்பீட்டுத் தொகையை, அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்காததால், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், இரு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
சேலம், கந்தம்பட்டியைச் சேர்ந்த அருணாசலம் மகன் சதீஷ், 24. பெங்களூருவில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்தார். 2014 அக்., 7ம் தேதி, மதுரையில் இருந்து சேலத்திற்கு, சேலம் கோட்ட அரசு பஸ்சில் பயணித்தார். நாமக்கல் அடுத்த புதன்சந்தை மேம்பாலத்தில், முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளரும், அரசுப் போக்குவரத்து கழகமும் விபத்து நஷ்ட ஈடு வழங்கக்கோரி நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் சதீஷ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சதீஷ் குடும்பத்தினருக்கு, ஒன்பது லட்சத்து, 25 ஆயிரம் ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க, 2018 ஜூன், 5ல் உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் அந்த தொகையை வழங்கவில்லை. இதையடுத்து, நவ., 29ல் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், 12 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து வழங்க, கடந்த டிச., 26ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் போக்குவரத்து கழகம் பின்பற்றாததால், நீதிபதி ஜெயந்தி உத்தரவின்பேரில், நேற்று மதியம், 1:00 மணியளவில், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த, இரு அரசு டவுன் பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. அவை நாமக்கல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X