பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜன 11, 2020
Advertisement

வெண்ணந்தூர்: வெண்ணந்தூரில், வளரிளம் பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து வளரிளம் பெண்களின் உரிமைகள், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. வெண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். தன் சுத்தம், சத்தான உணவு பழக்கம், இரும்புச்சத்து குறைபாடு இல்லாத நிலையை உருவாக்குதல், பிரசவத்தின்போது எடை குறைவான குழந்தைகள் பிறப்பை தடுத்தல், உடல் ரீதியான மாற்றங்களை பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் வகையில் விளக்கம் அளித்தல், பெண் குழந்தை களிடம் யாரேனும் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தால், அதுகுறித்து பெற்றோர் மற்றும் காவல்துறையிடம் புகார் தெரிவிப்பது குறித்தும், சத்தான உணவுக்காக அங்கன்வாடி மையங்களில் இயற்கை காய்கறிகளை பயிரிட்டு பயன்படுத்துதல் ஆகியவை குறித்து விரிவாக கூறப்பட்டது. தொடர்ந்து, பிரசவத்தின் போது குறைந்த எடை கொண்ட குழந்தைகளை பெற்றெடுத்த, 13 பேருக்கு, அரை கிலோ பேரீச்சை, உலர் திராட்சை, கடலை, பொட்டுக்கடலை, கருப்பட்டி, நெய் மற்றும் முந்திரி பருப்பு, கேழ்வரகு மாவு ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்து உணவுத் தொகுப்பை கலெக்டர் வழங்கினார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மீரா சங்கர், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மனநல மருத்துவர் குணமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X