பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம்

Added : ஜன 11, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல், அரசு மகளிர் கல்லூரியில் உடல்நலம் குறித்து, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், உடல்நல குழு சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். வேலூர் சி.எம்.சி., மருத்துவ கல்லூரி முன்னாள் உதவிப் பேராசிரியர், மனநல நிபுணர் ஷியாம் சுந்தர் பேசியதாவது: மனநலம் சார்ந்த பாதிப்புக்குட்பட்டு தவறான முடிவு எடுப்பவர்கள், 10 சதவீதம் மட்டுமே, மீதி, 90 சதவீத மக்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்தம் குறைக்கும் வழிகளாக மாணவியர் விளையாடுவது, வருடத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது, மொபைல் போனை அதிகமாக பயன்படுத்தாமல் இருப்பது, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் ஒதுக்குவது போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X