முதியவரிடம் மொபைல்போன் பறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரிடம் மொபைல்போன் பறிப்பு

Added : ஜன 11, 2020

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, ஹெல்மெட் அணிந்த இருவர், முதியவரிடம் மொபைல்போன் பறித்துச் சென்றனர். குமாரபாளையம், கவுரி தியேட்டர் பின்புறம் சேலம் -கோவை புறவழிச்சாலை டீச்சர்ஸ் காலனியில் வசிப்பவர் லிங்கப்பன், 75. இவர், நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் பள்ளிபாளையம் சாலைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். இவரது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த இரு மர்ம நபர்களில் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் மொபைல் போன் கேட்டார். பணம் இல்லையென்றதும், முதியவர் பாக்கெட்டில் வைத்திருந்த போனை பறித்துக்கொண்டு சென்றனர். குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X