இந்தியர்கள் அப்பாவிகள்: ப.சிதம்பரம் கிண்டல்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (190)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : மத்திய அரசு அமல்படுத்தும் திட்டங்கள் குறித்து எதை சொன்னாலும் மக்கள் நம்பி விடுகின்றனர். அவர்களை போன்ற அப்பாவிகளை எங்கும் பார்த்தது இல்லை என முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.






டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை. நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை நாம் நம்புகிறார்கள். அனைத்தையும் நம்புகிறார்கள். அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்றுள்ளது. 99 சதவீத கிராமங்களில் கழிப்படை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்ததையும் நம்புகிறார்கள்.





அதேபோன்று, ஆயுஸ்மான் பாரத் திட்டத்தையும் நம்புகின்றனர். டில்லியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆயுஸ்மான் பாரத் திட்ட அடையாள அட்டையை காண்பித்து சிகிச்சை பெறும்படி அவரிடம் கூறினேன். ஆனால், அவர்களுக்கு, ஆயுஸ்மான் பாரத் திட்டம் உள்ளதே தெரியவில்லை.

அவர்கள் அனைத்து மருத்துவமனைக்கு சென்றும் தெரியவில்லை. ஆனால், இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நாம் நம்புகிறோம். எந்த நோய்க்கும் பணம் செலவு செய்யாமல் சிகிச்சை பெறலாம் என நம்புகிறார்கள். நாம் அப்பாவிகளாக உள்ளோம். பல செய்திகள் மற்றும் விவரங்கள் உண்மைக்கு மாறாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (190)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shree - Chennai,இந்தியா
16-ஜன-202014:58:53 IST Report Abuse
Shree ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் பேசும் பேச்சுப்போல் தெரியவில்லை. மத்திய அரசு திட்டத்தை செயல் படுத்தி உள்ளது. ஊடகங்களின் வாயிலாகவும் பல முறை பிரச்சாரம் செய்துள்ளது. அதை பயன் படுத்திக்கொள்வது குடிமக்களின் கடமை. தெரியாதவர்களிடம் திட்டத்தைப் பற்றி எடுத்துச்சொல்லி, சேர்ந்துகொள்ள ஊக்கப்படுத்த வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை. அதைவிட்டுவிட்டு திட்டத்தைக் குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. அந்த ட்ரைவரை திட்டத்தில் சேரும் வழிமுறைகளை எடுத்துச் சொல்லி சேர்த்துவிட்டிருந்தால் இவர் நியாயமானவர். நாடு முழுவதும் இந்தத் திட்டத்தால் ஏராளமானவர் பயன் அடைந்துக்கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
14-ஜன-202019:48:45 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam கல்விக்கடன் எனும் அரிய விங்ஞான திட்டம் மூலம் அரசியல் வாதிகள் நடத்தும் கள்ளூரிகளுக்கு பணம் சம்பாதிக்க ஏழை பெற்றொர் களை கட்னாளியாக்கிய தமிழக கல்வித்தந்த்தை காமராசர் ரின் கல்வி இலவசம் என்னும் எண்ணத்தினை மறக்கடித்து ஆகா கல்விக்கு கடன் என நம்பிய மக்கள் உண்மையிலேயே அப்பாவிகள் தான் இன்று பெற்றேர் வாழ்நாள் சம்பாதித்த சொத்துக்ள் அடமானத்தில், அரசியல் வாதிகளின் கல்லூரிகள் அவர்க்ளின் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது , விளைவு பெற்றோர்கள் கடனாளிகளாக உள்ளனர்... எனவே உன்னை நம்பிய மக்கள் அப்பாவிகளே...
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-202014:01:57 IST Report Abuse
Yaro Oruvan ஹா ஹா.. அப்புச்சி ஏன் இந்த கருத்த சொல்லியிருக்காரு? நம்மளையும் ஒரு பொருட்டா நம்பி மத்தியில நிதி மந்திரி வரைக்கும் வச்சாங்களே இந்த மக்கள்... அவுக்க அப்பாவிதானே.. இல்லாங்காட்டி அப்பு பப்பு வெந்திருக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X