பொது செய்தி

தமிழ்நாடு

போர்வெல் குழிகள் குறித்து விழிப்புணர்வு பயணம் நிறைவு

Added : ஜன 11, 2020
Advertisement

கரூர்: திறந்த நிலையில் உள்ள, போர்வெல் குழிகளை மூடக்கோரி விழிப்புணர்வு பயணம் சென்ற, ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., கரூரில் பயணத்தை நிறைவு செய்தார்.
கரூர் மாவட்டம், டி.செல்லாண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சிவாஜி, 65; ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., இவர், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிலையில், திறந்த நிலையில் உள்ள போர்வெல் குழாய்களை மூடக்கோரி, தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர், 25ல் விழிப்புணர்வு பயணத்தை துவக்கினார். நேற்று மாலை, கரூர் போலீஸ் ஸ்டேஷனில் பயணத்தை நிறைவு செய்தார். அவருக்கு, போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது, சிவாஜி கூறுகையில், ''தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், டூவீலரில் தமிழகம் முழுவதும் சென்று, மீண்டும் எந்த குழந்தையும் போர்வெல் குழாயில் விழக்கூடாது என்பது குறித்து, துண்டு பிரசுரம் வழங்கினேன். பல இடங்களில் திறந்த நிலையில் இருந்த, 18 போர்வெல்குழிகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகம் உதவியுடன் மூடியுள்ளேன்,'' என்றார். ரோட்டரி சங்க தலைவர் ராமசாமி, போலீஸ் ஏட்டு முத்துசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X