பொது செய்தி

தமிழ்நாடு

பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Added : ஜன 11, 2020
Advertisement

கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவிலில், ஆருத்ரா தரிசன மோத்சவ விழா கடந்த, 3ல் நடராஜர் ரக் ஷா பந்தனம் மற்றும் மாணிக்கவாசகர் திருவெம்பாமை உற்சவத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடராஜருக்கு, சிறப்பு அபி ?ஷகமும், 10:30 மணிக்கு சுவாமி தரிசனமும் நடந்தது. தொடர்ந்து, உற்சவரின் திருவீதி உலா நடைபெற்றது. மாலை, 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வாழை மட்டையால் பக்தர்களை அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


* குளித்தலை அடுத்த, ஆர்.டி., மலை விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. நடராஜருக்கு, 16 வகை திரவியங்கள், மலர்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை செய்யப்பட்டது. சிவகாமசுந்தரி (பார்வதி), மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதேபோன்று, சின்னரெட்டிப்பட்டி ஆவுடை நாயகி உடனமர் ஆவுடை லிங்கேஸ்வரர் மலை திருக்கோவில், தோகைமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உட்பட அனைத்து ஆலயங்களிலும், ஆருத்ரா தரிசன விழாக்கள் நடந்தன.


* கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டத்தில் சிவன் கோவில் உள்ளது. நேற்று காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நடராஜர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.


* லாலாப்பேட்டை, செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன் கோவில் வளாகத்தில் நடராஜர் உற்சவ சிலைக்கு பல்வேறு அபி?ஷகங்கள் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X