பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகரின் ஆக்கிரமிப்பு இடம்: அகற்ற முடியாமல் நகராட்சி திணறல்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கரூர்: கரூரில், தி.மு.க., பிரமுகர் ஆக்கிரமித்துள்ள கடையை, அகற்ற முடியாமல் நகராட்சி அதிகாரிகள், இரண்டாவது முறையாக திரும்பினர்.
கரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், இரும்பு பெட்டி கடை குறிப்பிட்ட அளவில், வைத்து வியாபாரம் நடத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்ட, தி.மு.க., துணை செயலாளர் மகேஸ்வரி, 48; நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில், பெட்டிக்கடை வைத்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளார். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான இடத்தில் கடை நடத்துவதாக கூறி நகராட்சி அதிகாரிகள் கடந்த, 7ல் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றனர். அங்கு வந்த, தி.மு.க.,வினர், பொருட்களை அகற்றி கொள்வது குறித்து, கரூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நகராட்சி அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்நிலையில், நேற்று காலை, 11:30 மணிக்கு நகரமைப்பு அலுவலர் அன்பு தலைமையில், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன், மகேஸ்வரி கடையில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதியை அகற்ற வந்தனர். அப்போது, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்ரமணி உள்ளிட்ட, தி.மு.க.,வினர், 'நீதிமன்ற உத்தரவின்றி கடையை அகற்றக் கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல், நகராட்சி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சொதப்பும் நகராட்சி நிர்வாகம்: கரூர் நகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்றும் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்வது இது முதல் முறையல்ல. பலமுறை, இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதிலிருந்து, பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் சொதப்பி வருகின்றனர். பாதுகாப்புக்கு செல்லும், போலீசாரின் நேரத்தையும் வீணடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-ஜன-202020:32:52 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan JCB வைத்து கடைய தூக்க வேண்டியதுதான். கதை முடிந்தது. என்ன நீதி மன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X