பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜன 11, 2020
Advertisement

சுகாதார வளாக மோட்டார் பழுது: குளித்தலை அடுத்த, நல்லூர் காலனி குடியிருப்பு பகுதியில் அரசு யூனியன் தொடக்கபள்ளி முன் பொது சுகாதார வளாகம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மின் மோட்டார் பழுதாக உள்ளது. தண்ணீர் வசதியில்லாததால், குழந்தைகள் முதல் முதியோர் வரை திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மின் மோட்டாரை சரி செய்ய, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்டெக்ஸ் தொட்டி பராமரிக்கப்படுமா? குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் அருகில், பஞ்., சார்பில் ஆழ்துளை குழாய் மூலம் குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால், பொது மக்கள் குடிநீர் பிடிக்க சிரமப்படுகின்றனர். எனவே, பழுது ஏற்பட்ட மின் மோட்டாரை சரி செய்து, தட்டுபாடு இல்லாமல் குடிநீர் வழங்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

கழிப்பிட கதவுகள் சேதம்: குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., கீழ்சத்தியமங்கலம் கிராமத்தில் திம்மம்பட்டி கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்காததால், பொது மக்கள் பொது கழிப்பிட வளாகத்தினை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது, கழிப்பிட கட்டடம் மற்றும் கதவுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரிசெய்து, தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

குண்டும், குழியுமான சாலையால் விபத்து: குளித்தலை நகராட்சி, பெரியபாலத்தில் புதியதாக தொடங்கப்பட்ட பெரியார் நகரில், 200க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், பெரியார் நகர் போலீஸ் செக்போஸ்ட் எதிரே செல்லும் பிரதான சாலையில் கற்கள் பெயர்ந்தும், குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இச்சாலையில் குடியிருப்பு பகுதியில் இருந்து வீணாகும் தண்ணீர், சாலையில் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். புதிய சாலை அமைக்க வேண்டும்.

மேட்டுவாய்க்கால் பாலத்தில் பாதிப்பு: குளித்தலை அடுத்த, பிள்ளபாளையம் கிராமத்தில் பழைய கட்டளை மேட்டுவாய்க்கால் செல்லுகிறது. இந்த வாய்க்காலில், லாலாப்பேட்டையில் இருந்து அய்யர்மலை செல்லும் நெடுஞ்சாலையில், பாலத்தின் இருபுறங்களில் தடுப்பு கட்டை சேதமடைந்துள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி, பாலத்தில் சேதமான தடுப்பு கட்டைக்கு பதிலாக, புதிய கட்டைகள் அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X