தமிழ்நாடு

கோட்ட பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் கரூருக்கு மாற்ற கோரிக்கை

Added : ஜன 11, 2020
Advertisement

கரூர்: தாராபுரத்துக்கு மாற்றப்பட்ட அமராவதி ஆற்றின் வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை, கரூருக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என, கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டையில், 1954ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1958ல் அமராவதி அணை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. மொத்தம், 90 அடி. கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிளை ஆறுகளான வரதமாஞ்சாதி, பாம்பாறு, நஞ்சகாளக்குறிச்சி மற்றும் குடகானாறு மூலம் அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் வருகிறது. இறுதியாக, கரூர் மாவட்டத்தில் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரியாற்றில் அமராவதி ஆறு கலக்கிறது. தற்போது, புதிய திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய, புதிய ஆயக்கட்டுகளில் உள்ள வாய்க்கால் பகுதிகளில், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள, 11 வாய்க்கால்களில், ஒரு சில வாய்க்கால் பகுதியை தவிர மற்ற பகுதிகளில், 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால், விவசாயிகளின் கோரிக்கைப்படி, அமராவதி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக கரூரில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தின் மூலம், அமராவதி அணையின் நீர் இருப்பு, தண்ணீர் திறப்பு தேதி, வாய்க்கால் மராமத்து பணிகள் குறித்த விபரம், சாகுபடி விபரங்களை, கரூர் மாவட்ட விவசாயிகள் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது. இந்நிலையில், கரூரில் இருந்து செயற்பொறியாளர் அலுவலகம், 2012ல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து, கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமராவதி ஆற்று பாசன விவசாயிகள் கூறியதாவது: அமராவதி ஆறு மூலம் கரூர் மாவட்டத்தில் நடந்து வந்த விவசாய சாகுபடி பணிகள் படிப்படியாக குறைந்து வருகிறது. பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள பெரும்பாலான வாய்க்காலில் புதர் மண்டி கிடக்கிறது. சில வாய்க்காலில் சாயக்கழிவு தான் ஓடுகிறது. அமராவதி ஆற்றில் போதிய தண்ணீர் திறக்கப்படாததால், மீதமுள்ள சில வாய்க்கால் தண்ணீரின்றி வறண்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, பழைய ஆயக்கட்டு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால், 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுக விவசாய வேலைகள் கிடைக்கவில்லை அமராவதி ஆற்றுப் பகுதிகள் குறித்து விவசாயிகள் புகார் செய்ய, செயற்பொறியாளர் அலுவலகம் கரூரில் இருந்தது. இதை, 2012ல் தாராபுரத்துக்கு மாற்றி விட்டனர். இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பழைய ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் மனு கொடுக்கவே, 70 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும், பொறியாளர் அலுவலகம் மீண்டும் கரூருக்கு மாற்றப்படவில்லை. அதை மீண்டும் கரூருக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X