கிணற்றில் விழுந்த மாணவர் சடலம் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த மாணவர் சடலம் மீட்பு

Added : ஜன 11, 2020

கரூர்: கரூர் அருகே மீன் பிடிக்கச்சென்ற போது, கிணற்றில் விழுந்த, பள்ளி சிறுவன் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பசுபதிபாளையம், வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் திருமுருகன், 13; அதே பள்ளியில் உள்ள, அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை, 4:00 மணிக்கு வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில், திருமுருகன் மீன் பிடிக்க சென்றார். அப்போது, தவறி கிணற்றில் விழுந்த திருமுருகன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு துறையினர் திருமுருகன் உடலை மீட்டனர். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X