சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை இறந்து பிறந்ததால் மருத்துவமனை முற்றுகை

Added : ஜன 11, 2020
Share
Advertisement

கரூர்: சரியான சிகிச்சை அளிக்காததால், குழந்தை இறந்து பிறந்ததாக கூறி, கரூர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மீரா பாவா தெரு பகுதியை சேர்ந்தவர் நூருல் அமின், 40; எலக்ட்ரீஷியன். இவருடை மனைவி ஜாஸ்மின், 32; கர்ப்பிணியான ஜாஸ்மினை பிரசவத்துக்காக கடந்த, 5ல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை, 6:00 மணிக்கு ஜாஸ்மினுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது, ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், 'சரியான சிகிச்சையளிக்காததால் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதனால், டாக்டர்கள், நர்சுகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறி காலை, 11:30 மணிக்கு, டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். டீன் ரோஸி வெண்ணிலா இல்லாததால், மற்ற அதிகாரிகளிடம் மனு கொடுத்து விட்டு, குழந்தையின் உடலை பெற்றுச் சென்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில், ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X