நிலம் தொடர்பான தகராறு: மாஜி எம்.எல்.ஏ., மீது தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலம் தொடர்பான தகராறு: 'மாஜி' எம்.எல்.ஏ., மீது தாக்குதல்

Added : ஜன 11, 2020

கரூர்: கரூர் அருகே, நிலம் தொடர்பான தகராறில், முன்னாள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தாக்கப்பட்டார்.
கரூர், திருகாம்புலியூரைச் சேர்ந்தவர் காமராஜ், 53; கிருஷ்ணராயபுரம் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தற்போது, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர். இவர், பாலம்மாள்புரத்தில் இருந்த நிலங்களை, மனைவி செல்வராணி, 45, மகன் மணி கண்டன், 28, பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதி வைத்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் அவருக்கு எழுதி தரப்பட்ட நிலங்களை, கரூர் ஐ.ஓ.பி., வங்கியில், அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். ஆனால், கடனை திருப்பிச் செலுத்தாததால், வங்கி நிர்வாகம், சில மாதங்களுக்கு முன் நிலத்தை ஏலம் விட்டது. அதை, நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த சதீஷ்குமார், 45, ஏலம் எடுத்தார். நேற்று காலை, 11:30 மணிக்கு சதீஷ்குமார் தரப்பினர் ஏலம் எடுத்த இடத்தில், கம்பி வேலி போடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, செல்வராணியின் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி, காமராஜ் தட்டி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தரப்பினர், காமராஜை தாக்கி விட்டு தப்பினர். காயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X