சாலையின் இருபுறமும் முட்செடிகளால் சிரமம்| Dinamalar

சாலையின் இருபுறமும் முட்செடிகளால் சிரமம்

Added : ஜன 11, 2020

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேங்காம்பட்டி முதல் அய்யர்மலை வரை சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக மக்கள் தினமும் வாகனங்களில் செல்கின்றனர். சாலை இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால், இந்த வழியாக செல்லும் போது வாகனங்களில் சாலையோரம் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். ஆகையால் சாலையில் வளர்ந்து வரும் முட்செடிகளை வெட்டி அகற்று வதற்கான நடவடிக்கையை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்ல முடியும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X