மதுவிலக்கை எதிர்த்து ம.பி., அமைச்சர் கருத்து

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

போபால் : மதுவிலக்கிறகு எதிராகவும், மது அருந்துவோருக்கு ஆதரவாகவும் காங்., கட்சியின் அமைச்சர் ஒருவர் பேசி உள்ளது மத்திய பிரதேச அரசியலில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.



latest tamil news




மத்திய பிரதேசத்தில் ஆளும் கமல்நாத் தலைமையிலான காங்., அரசு, சமீபத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் கிளை டாஸ்மாக் கடைகளை திறக்க ஒப்பந்தக்காரர்களுக்கு அனுமதி அளித்தது. மாநில வருவாயை அதிகரிப்பதற்காகவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் கமல்நாத்தின் இந்த நடவடிக்கை, மதுபான மாபியாக்களுக்கு புத்தாண்டாக அமைந்து விடும் எனவும், மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டு முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அரசின் முடிவுக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்ததுடன், முடிவை திரும்பப் பெறவும் வலியுறுத்தியது.


latest tamil news




இந்நிலையில் அமைச்சர் கோபால் சிங் மதுபான விற்பனை குறித்து வினோத விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், மது குடிக்க யாரையும் யாரும் வற்புறுத்த முடியாது. தாங்களாக விருப்பப்பட்டு அவர்கள் வாங்கி, குடிக்கிறார்கள். ஜனநாயகத்தில் ஒருவருக்கு அவர் விரும்பியதை சாப்பிடவும், குடிக்கவும் உரிமை உள்ளது.குடிப்பதற்கு நாங்கள் எந்த தடையும் விதிக்க முடியாது. அவர்கள் இரவில் ஒரு பெக் மட்டுமே குடிக்கிறார்கள். அப்படி குடிக்கவில்லை என்றால் அவர்களால் இரவில் தூங்கவோ, மறுநாள் முழுவதும் வேலை செய்யவோ முடியாது.


latest tamil news




அவர்கள் குடிப்பதால் தான் இரவில் நன்றாக தூங்குவதுடன், நாள் முழுவதம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வேலை செய்கிறார்கள். சிலர் தங்கள் நோய் தீர்வதற்காக மருந்தாக மது குடிக்கிறார்கள். சிலர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு டாக்டர் அறிவுரைபடி ஒரு பெக் குடிக்கிறார்கள். சட்ட விரோதமாக மதுக்கடைகள் திறக்கப்படுவதை தடுக்கவும், வருவாய் இழப்பை சரி செய்வதற்காகவும் கமல்நாத் அரசு, கிளை டாஸ்மாக்கள் திறக்க அனுமதி அளித்துள்ளது. சிவராஜ் சிங் சவ்கானுக்கு மதுபான விற்பது பற்றி கவலை என்றால் அவரது ஆட்சி காலத்தில் மதுவிலக்கு கொண்டு வந்திருக்கலாமே என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஜன-202022:13:19 IST Report Abuse
S.Baliah Seer சிவராஜ் சிங் சவுகான் இந்தியாவின் மிக சிறந்த முதல்வர்களும் ஒருவராய் இருந்தவர்.அவரை வம்புக்கு இழுக்க மத்திய பிரதேச அமைச்சருக்கு அருகதை இல்லை.குடிக்கு அவர் சொல்லும் விளக்கம் கேவலமாக உள்ளது.குடிகாரன் ஒரு பெக் தான் அடிப்பானாம்.டாக்டர் குடிக்க சொல்கிறாராம்.ஒரு குவாட்டர் என்பது 180 மி.லி .அதுவே 3 பெக்.குவாட்டரோ அதுக்கு மெலோ அடிப்பவன் மறுநாள் சுறுசுறுப்பு இல்லாத தத்தியாய் இருப்பான்.குடிகாரன் எவனாவது குவாட்டருக்கு கீழ் குடிப்பானா.குடிகாரன் நாட்டுக்கும் குடும்பத்துக்கும் பெரிய சுமையானவன்.ஒரு அமைச்சர் அதுவும் காங்கிரஸ்காரர் இவ்வளவு மட்டமா பேசியிருக்க கூடாது.
Rate this:
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202018:44:37 IST Report Abuse
Ram RV டாஸ்மாக் என்பது தமிழக அரசின் நிறுவனம். மத்தியப் பிரதேசத்தில் டாஸ்மாக் எங்கிருந்து வந்தது? மதுக்கடை என்றாலே டாஸ்மாக்கா?
Rate this:
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202018:44:37 IST Report Abuse
Ram RV டாஸ்மாக் என்பது தமிழக அரசின் நிறுவனம். மத்தியப் பிரதேசத்தில் டாஸ்மாக் எங்கிருந்து வந்தது? மதுக்கடை என்றாலே டாஸ்மாக்கா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X