பொது செய்தி

இந்தியா

ஜே.என்.யூ,வில் சட்ட விரோத மாணவர்கள்: துணைவேந்தர்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி ஜே.என்.யூ, விடுதியில் சட்ட விரோதமாக பலர் தங்கி உள்ளதாக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.latest tamil newsஜே.என்.யூ., வில் சமீபத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 27 பேர் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் கூறி வருகின்றனர்.

இந்த வன்முறை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மாணவர் சல்க தலைவிக்கு தொடர்பு இருப்பதாகவும், இடதுசாரி கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.


latest tamil newsஇந்நிலையில் பல்கலை., வளாகத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், மாணவர் பிரதிநிதிகளை அழைத்து இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், பல்கலை., விடுதிகளில் ஏராளமான சட்ட விரோத மாணவர்கள் தங்கி உள்ளனர். இது தான் தற்போது பெரிய பிரச்னையாக உள்ளது.

அவர்கள் வெளி ஆட்களாக இருக்கலாம். அவர்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் பல்கலை.,க்காக ஏதும் செய்யவில்லை. அவர்கள் பல்கலை.,யுடன் தொடர்பு இல்லாதவர்கள். போராட்ட குணமுள்ள சில மாணவர்களால் நமது அப்பாவி மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் பல்கலை., வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
12-ஜன-202010:36:06 IST Report Abuse
தமிழ்வேள் மாணவர் விடுதிகளில் பெரும்பாலும் தங்கியிருப்பவர்கள் வெளி ஆட்களே அதை தடுக்க தட்டி கேட்க யாரும் இருப்பதில்லை அப்படி மீறி கேட்டால் கெட்டவன் உயர்சாதி சாதி வெறிகொண்டவன் என்ற கூக்குரல் போராட்டம் கிளம்பும் .. விடுதிகள் மற்றும் கல்லூரி பல்கலை . வளாகங்கள் CRPF அல்லது CISF கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் நிர்வாகம் அவர்களுக்கு ஒத்துவராது
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஜன-202009:44:32 IST Report Abuse
 Muruga Vel அமெரிக்க பல்கலை கழகங்களில் குறிப்பாக டெக்ஸ்சாஸ் மாநில பல்கலை கழகங்களில் போலீஸ்காரர்கள் அதிநவீன வாகனங்களுடன் தென்படுவது சர்வ சாதாரணம் .. பல்கலைகளில் வாகனங்களை தாறு மாறாக ஓட்டினால் கூட போலிஸ் தீவிர நடவடிக்கை எடுப்பார்கள் ..
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
12-ஜன-202001:10:06 IST Report Abuse
chenar ஜெ என் யு வில் பாகிஸ்தான் உளவாளிகள் ஜெ என் யு வில் இஸ்லாம் தீவிரவாதிகள் ஜெ என் யு வில் அர்பன் நக்சல்கள் ஜெ என் யு வில் நக்சல் பாரிகள் ஜெ என் யு வில் வெளிக்கிரக மனிதர்கள் ஜெ என் யுவில் அடிப்பட்டவர்கள் அனைவரும் தங்களை தாங்களாகவே அடித்து கொண்டு ரத்தம் வர வைத்து கொண்டார்கள் இதை என் கண்களால் பார்த்தேன் துணைவேந்தர்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஜன-202011:53:08 IST Report Abuse
 Muruga Velநீங்க சொன்னா சரியா தான் இருக்கும் .....
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஜன-202013:37:28 IST Report Abuse
 Muruga Velஅந்த சமாச்சாரம் ஜெ என் யு வில் சர்வ சாதாரணம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X