அமித்ஷா போல் பேசி ஏமாற்ற முயற்சி: விமானப்படை வீரர் கைது

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Amitshah, HMamitshah, homeministerAmitshah,  madyapradesh, MP, governor, MPGOvernor, laljitandon, governorlaljitandon, doctor, dentist, Iaf, airforce, Indianairforce, vicechancellor, vc, அமித்ஷா, உள்துறைஅமைச்சர்அமித்ஷா,  மபி, மத்தியபிரதேசம், கவர்னர், ம.பி.,கவர்னர், லால்ஜிடாண்டன், டாக்டர், துணைவேந்தர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போல் பேசி, ம.பி., கவர்னர் லால்ஜி டாண்டனை ஏமாற்ற முயன்ற விமானப்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணிபுரிபவர் குல்தீப் பகேலா. டில்லியில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் சந்திரேஷ் குமார் சுக்லா. போபாலை சேர்ந்த இவர் பல் மருத்துவராக உள்ளார். அம்மாநில அரசியல்வட்டாரத்தில் இவருக்கு பல நண்பர்கள் உள்ளனர். கவர்னர் மாளிகையில் நடவடிக்கைகளை அறிந்து வைத்துள்ளார்.

இவர், ஜபல்பூரில் உள்ள ம.பி., மாநில மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர், குல்தீப்பை கொண்டு துணைவேந்தர் ஆக வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தான் துணைவேந்தர் ஆக வேண்டும் என்றால், பெரிய அரசியல்வாதியின் பரிந்துரை தேவை என சுக்லா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் திட்டம் தீட்டி, கவர்னர் லால்ஜி டாண்டனை தொடர்பு கொண்டனர். அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போல் பகேலா பேசியுள்ளார். அமித்ஷா உதவியாளர் போல், சுக்லா நடித்துள்ளார். இந்த உரையாடல் போது, துணைவேந்தர் பதவிக்கு சுக்லா பெயரை பகேலா பரிந்துரை செய்துள்ளார்.


latest tamil news




லால்ஜி டாண்டனுக்கு சந்தேகம் ஏற்படவே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மோசடி அம்பலமாக குல்தீப் பகேலா, சந்திரேஷ் குமார் சுக்லாவை போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் வயது 35 முதல் 40 வரை இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஜன-202011:59:45 IST Report Abuse
Natarajan Ramanathan பிஜேபி என்பதால் மாட்டிக்கொண்டார்கள் காங்கிரஸ் அரசாக இருந்தால் இந்நேரம் துணைவேந்தராகி ஆறுமாதம்.. இருக்கும்
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-202004:09:36 IST Report Abuse
padma rajan Nagarwal Vs Indira Gandhi.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜன-202001:34:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதை அமீத் சாவே செஞ்சா தப்பில்லை.. வந்தே மாதரம் (சொல்லுங்க)..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X