உள்ளாட்சி மறைமுக தேர்தல்: அதிக இடங்களில் அதிமுக வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி மறைமுக தேர்தல்: அதிக இடங்களில் அதிமுக வெற்றி

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (29)
Share
LocalBodyElections, admk, dmk, உள்ளாட்சிதேர்தல், திமுக, அதிமுக

இந்த செய்தியை கேட்க

சென்னை: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை பிடிக்க நடந்த தேர்தலில் 14-ஐ அதிமுகவும் 12-ஐ திமுகவும் கைப்பற்றியுள்ளன.

மாவட்ட கவுன்சிலர்கள் மூலம், 27 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் வாயிலாக 314 ஒன்றிய குழு தலைவர்கள், 314 துணை தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வாயிலாக, 9,624 ஊராட்சி துணைத் தலைவர்கள் தேர்வு செய்ய மறைமுக தேர்தல் 27 மாவட்டங்களில் இன்று (ஜன.,11) நடந்தது.

அதில், 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 14 லும், திமுக கூட்டணி 12லும் வெற்றி பெற்றுள்ளன.

திருவாரூரில் மறைமுக தேர்தல் முழுமையாக நடந்து முடிந்த நிலையில், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுகவுக்கு 5 இடமும், திமுகவுக்கு 5 இடமும் கிடைத்தன.
கரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியையும், 8 ஒன்றியங்களையும் அதிமுக கைப்பற்றியது. கரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் கண்ணதாசன் தேர்வானார்.

திருச்சி மாவட்ட ஊராட்சியையும், 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது.

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் ராஜேந்திரன் தேர்வானார். அந்த மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வானார். திமுக கூட்டணிக்கு அதிக இடம் இருந்த போதிலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் உஷாவும், நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் சாரதாவும், தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் ப்ரீத்தாவும், நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பான்தோசும் தேர்வு செய்யப்பட்டனர்.

கடலூர், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவும், திமுகவும் சரிசமமாக ஓட்டுகளை பெற்றதால், குலுக்கல் நடத்த தேர்தல் அதிகாரி முடிவு செய்தார். இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

கடலூரில் உள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக 10, திமுக 2 ஐ கைப்பற்றின

தூத்துக்குடியில் உள்ள 12 ஒன்றியங்களில் அதிமுக 6ஐயும் திமுக 4ஐயும், அமமுக 1யும் கைப்பற்றின.

நாமக்கல்லில் உள்ள 15 ஒன்றியங்களில் அதிமுக 10, திமுக 5 ஐ கைப்பற்றின.


துணைத்தலைவர்


மாலை 5.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 27 மாவட்ட ஊராட்சி துணைதலைவர் பதவிகளில், அதிமுக கூட்டணி 13ஐயும், திமுக கூட்டணி 13ஐயும் கைப்பற்றின


latest tamil news





ஒன்றிய தலைவர் தேர்தல்


மாலை 5.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 314 ஒன்றிய தலைவர் பதவிகளில், அதிமுக கூட்டணி 140 இடங்களிலும், திமுக கூட்டணி 125 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.


ஒன்றிய துணை தலைவர்


மொத்தமுள்ள 314 ஒன்றிய துணை தலைவர் பதவிகளில் அதிமுக கூட்டணி 94 இடங்களிலும், திமுக கூட்டணி 107இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக 12 இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை. போதிய உறுப்பினர்கள் வராததால் 13 இடங்களில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X