மோடி- மம்தா முதல் சந்திப்பு

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (18)
Advertisement
மோடி, மம்தா, சந்திப்பு, கோல்கட்டா, Mamata Banerjee, மம்தா, மம்தா பானர்ஜி

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா: மேற்குவங்கம் சென்ற பிரதமர் மோடியை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முதன் முறையாக சந்தித்து பேசினார்.

அரசியல் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் மம்தாவின் மோடி மீதான தாக்குதல் என பல கசப்புகள் இருந்தாலும் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

மேற்றுவங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா ஆரம்பம் முதலே பா.ஜ., மற்றும் மோடியை கடுமையாக எதிர்த்து வருகிறார். இவர்கள் இடையே பல பிரச்னைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதலில் மாநிலத்தையே உலுக்கிய சாராதா சிட்பண்ட் ஊழல், இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்வதில் மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
மேலும், கோல்கட்டா கமிஷனராக இருந்த ராஜீவ்குமாரை சி.பி.ஐ., கைது செய்ய சென்ற போது மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது மாநிலத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கவர்னருடன் மோதல், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மம்தா அடம் பிடித்து வருகிறார். இதற்கென மத்திய அரசை எதிர்த்து அவரது தலைமையில் மெகா பேரணியும் நடந்தது.

இவ்வாறு பல கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில் பிரதமர் மோடி, கோல்கட்டா துறைமுக 150 வது ஆண்டு விழா, சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இன்று கோல்கட்டா சென்றார்.

கவர்னர் மாளிகைக்கு சென்ற மோடியை முதல்வர் மம்தா சந்தித்து பேசினார். இது இருவரது முதல் சந்திப்பு ஆகும். இந்த சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய மம்தா; நான் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பிரதமரிடம் எழுப்பினேன். இதனை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளேன். இவ்வாறு மம்தா கூறினார்.


ஆர்பாட்டத்திற்கு சென்றார் மம்தா


மோடியை சந்தித்த பின்னர் மம்தா, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஆர்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். இந்த ஆர்பாட்டத்தை அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவரணி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202022:33:12 IST Report Abuse
krishna indha mamatha begum etthunda enna ethukkati enna.sattam vandhu vittadhu.Yaralum thadukka mudiyadhu.Indha mamatha oru kodi Bangladesh moorgankalai voter Id koduthu vechu kondu jaippadhu miga kevalam.Ivalai desa dhroga vazhakkil ulle poda vendum.
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-202022:19:42 IST Report Abuse
கதிர்    கோவை மம்மு ஒரு வெறி பிடித்த பெண் மோடிஜி சோனியாஜி கம்யூனிஸ்ட் கட்சி யாரிடமும் மம்மு நட்புடன் இருக்க மாட்டார் மம்முவிற்கு நான் தான் லீடர் என்கிற ஆணவம் அதிகம்
Rate this:
Share this comment
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
11-ஜன-202021:46:38 IST Report Abuse
unmaitamil ஆத்திரக்காரனுக்கு புத்தி குறைவு . ஆர்ப்பாட்டத்துக்கு போகவிடில் மோடி காலில் விழுந்தது தெரிந்துவிடும். தூ..தூ க்கு வேற வழி இல்லை . தன்னை திருத்திக்கொள்ள இந்த அம்மாவுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X