பட்ஜெட் மதிப்பீட்டு நிதி; இந்தியாவுக்கு ஐ.நா சபை நன்றி

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (8)
Advertisement

நியூயார்க் : ஐ.நா சபையின் பட்ஜெட் மதிப்பீட்டு நிதியில் தன் பங்கினை முழுமையாக செலுத்திய இந்தியாவுக்கு ஐ.நா சபை நன்றி தெரிவித்துள்ளது.






ஐ.நா சபையின் பட்ஜெட் மதிப்பீட்டு தொகையில் (23,396,496 நிகர மதிப்பீடு) இந்தியாவுக்கான பங்கு (ஜன.,10) ல் முழுமையாக செலுத்தப்பட்டது. 193 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா சபையில் தனது பங்கினை முழுமையாக செலுத்திய நாடு என்னும் பெருமையினை இந்தியா பெற்றுள்ளது. நிதி ஒழுங்குமுறையில் குறிப்பிடப்பட்ட 30 நாட்களுக்குள் ( 2020 பிப்., 1) ம் தேதிக்குள் அதன் வழக்கமான பட்ஜெட்டை இந்தியா செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் பட்ஜெட் மதிப்பீட்டு தொகையை 4 வது நாடாக இந்தியா இன்று (ஜன.,11) வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு முன்னதாக அர்மேனியா, போர்ச்சுக்கல், உக்ரைன் ஆகிய நாடுகளும் நிதியை வழங்கியுள்ளன. இதற்காக, இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கும் ஐ.நா சபை தனது நன்றியை தெரிவிக்கிறது. இவ்வாறு கூறினார்.





மேலும் ஐ.நா தூதருக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பரூதீன் தனது டுவிட்டரில் கூறியதாவது : ஐ.நா சபையின் பட்ஜெட் நிதியை இந்தியா முழுமையாக வழங்கியது. மிகச் சிலரே இதனை ஏற்கனவே செய்துள்ளனர். இன்னும் பலரும் இதை செய்வார்கள் என நம்புகிறேன். பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாக செலுத்தியதை, 'ஐ.நா 2020 ஹானர் ரோல்' என குறிப்பிடுகிறது.





தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்.,ல் ஐ.நா பொதுச்செயலாளர் குட்டெரெஸ் உலக அமைப்பு எதிர்கொள்ளும் "கடுமையான பணப்புழக்க நெருக்கடி" குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். ஏறக்குறைய ஒரு தசாப்தத்தில் ஐ.நா எதிர்கொள்ளும் மிக மோசமான பண நெருக்கடி குறித்து உறுப்பு நாடுகளுக்கு எழுதியுள்ள ஐ.நா. தலைவர், இந்த அமைப்பு 2019 அக்டோபர் இறுதிக்குள் அதன் பணப்புழக்க இருப்புக்களைக் குறைக்கும் அபாயத்தையும், ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான கொடுப்பனவுகளைத் தவறும் அபாயத்தையும் கொண்டுள்ளது என்று கூறியிருந்தார்.

நிதி நெருக்கடியை எதிர்கொள்ள கடந்த ஆண்டு ஐ.நாவில் மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளில் உத்தியோகபூர்வ பயணங்கள் குறைப்பு, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவினங்களை ஒத்திவைத்தல் மற்றும் தலைமையக கடமை நிலையங்களில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேரங்களுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை நிறுத்துதல் ஆகியவை அடங்கும். இந்நிலையில் ஐ.நாவின் மதிப்பீடு தொகை முழுமையாக செலுத்தப்பட்டதையோட்டி ஐ.நா தனது நன்றியை தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
12-ஜன-202006:28:13 IST Report Abuse
blocked user பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-202004:26:41 IST Report Abuse
J.V. Iyer நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
12-ஜன-202000:52:54 IST Report Abuse
Vena Suna நமக்கு இது நல்ல பாராட்டு.இந்தநாள்,அதில் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் வருமானம் தவறாமல் கொடுக்க முடியும்.இதய,பல அரசுகள்,பணம் ஒழுங்காக கொடுக்காமல்,பல கம்பெனிகள் வேலை செய்பவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல்,பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளன. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் கற்றுக் கொள்ள வேண்டும். மாநில அரசில் ஆட்சி மாறினால்,முதல் அரசு செய்த திட்டங்கள் பொய் விடுகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X