ஈரானுக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (13)
Advertisement

ஒட்டாவா : ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் நொறுங்கியது. இதில் 63 கனடா மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு ஈரான் பதில் சொல்ல வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.


ஈரான் - அமெரிக்கா நாடுகளின் பிரச்னை மற்றும் தாக்குதல் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் தவறுதலாக உக்ரைனின் சர்வதேச ஏர்லைனர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை ஈரான் ஒப்புக்கொண்டது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 167 பேர் பலியாகியுள்ளனர்.


இந்த விமான விபத்து தொடர்பாக உக்ரைன், கனடா அரசின் உதவியை நாடியுள்ளது. பொதுவாக விமான விபத்து தொடர்பான ஆராய்ச்சிகள், விசாரணைகளை கனடா அரசுதான் அதிகமாக நடத்தும். அவர்களிடன் இதில் பலர் தொழில்நுட்ப பிரிவினர் உள்ளனர். அதனால் உக்ரைன், கனடா அரசிடம் உதவி கேட்டுள்ளது. மேலும் பலியான 167 பயணிகளில் 63 பேர் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். இதனை பெரிய பிரச்னையாகவே கனடா பிரதமர் ஜஸ்டின் அணுக துவங்கியுள்ளார்.

இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் அளித்த பேட்டியில் கூறியதாவது : உக்ரைன் நாட்டு விமானத்தை ஈரான் தாக்கி அளித்தது கண்டனத்திற்கு உரியது. எங்கள் கனடா மக்கள் 63 பேர் பலியாகி உள்ளனர். இதனை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்த உயிரிழப்பு குறித்து ஈரான் பதிலளித்தே ஆக வேண்டும். இது தொடர்பாக விசாரணையை நாங்கள் துவங்கியுள்ளோம். விரைவில் ஆதாரங்கள் வெளியாகும். இவ்வாறு கூறினார்.

கனடா குடிமக்களின் உயிரிழப்புக்கு ஈரான் பதில் சொல்ல வேண்டும் என கனடா பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஈரான் - கனடா இடையே பிரச்னை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-202000:34:24 IST Report Abuse
Shankar Ramachandran USA navy shot down an Airbus A300 passenger plane belonging to Iran Airlines killing all 290 passengers in July, 1988 apparently by mistake. The then President Ronald Reagan even apologised to Iran for same and the US Govt compensated by paying US$ 101.80 millions to the Iranian Govt.
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-202023:46:32 IST Report Abuse
Ganesan Madurai வாயக் கொடுத்து தன் காசில் சூனியம் வஞ்சிக்க முடிவு பண்ணிட்டானா இந்தாளு.
Rate this:
Share this comment
ஜானகிராமன் சுந்தரராஜன்மிக சரியான கருத்து !. ஐய்யா டீரு"டோப்" (Dope) மைனாரிட்டி அரசு வைத்து கொண்டு பல் கூட பிடுங்க முடியாது. 2012லிருந்து உறவை நிறுத்திவிட்டு இப்போ என்ன பண்ண முடியும். தவறான தலைவர்கள் மக்கள் "ஒசி" வாக்குரிதிகளுக்கு ஒட்டு போட்டு விட்டு இப்போது கதறினா ?. டீருடோ = கனெடிய பப்பு...
Rate this:
Share this comment
12-ஜன-202000:46:36 IST Report Abuse
Janakiraman Sundararajanwhat can Trudeau do ? Nothing !.Very unpopular in Canada....
Rate this:
Share this comment
Cancel
கருப்பு/வெள்ளை - Chennai,இந்தியா
11-ஜன-202022:59:10 IST Report Abuse
கருப்பு/வெள்ளை ஒழுங்கா இருந்த ஈரானை நோண்டி விட்டது உங்கள் பக்கத்து நாடுதான். முதலில் கண்டனத்தை அவர்களுக்கு தெரிவியுங்கள். தனது நாட்டின் எண்ணெய் உற்பத்தி தொழிலை விருத்தி செய்ய அடுத்த நாட்டை அழிக்க நினைப்பது எவ்வாறு சரியாகும்? இவர்கள் நாடு நாடக சென்று அட்டகாசம் செய்வார்கள், ஆனால் அங்கிருந்து யாராவது அவர்கள் நாட்டுக்குள் வந்தால் துரத்த நினைப்பார்கள். தனது பண பலத்தை நாட்டு மக்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர பிற நாடுகளை நசுக்குவதற்கு அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X