5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: மோடி

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (9)
Advertisement

கோல்கட்டா: நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று மோடி தெரிவித்தார்.


மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த 150வது துறைமுக ஆண்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் மோடி கலந்து கொண்டு பேசினார் .

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;
'நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும். மேலும், கோல்கட்டாவில் உள்ள பெல்டவர் ஹவுஸ், பழைய நாணய கட்டடம், விக்டோரியா நினைவகம் உள்ளிட்ட காட்சியகங்கள் நவீனமாக்கப்படும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பெல்டவர் ஹவுசினை உலகின் அருங்காட்சியமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஒத்துழைக்கும். பிப்லோபி பாரத் என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். அதில் நேதாஜி, சுபாஷ்சந்திரபோஸ் அரவிந்தோ கோஷ் ராஷ் பிஹாரி போஸ் தேஷ்பந்து, பாகா ஜடின், பினாய், பாடல், தினேஷ் போன்ற ஒவ்வொரு சிறந்த சுதந்திர போராளிகளுக்கு அதில் முக்கியத்துவம் வழங்கப்படும்' இவ்வாறு மோடி பேசினார்

முன்னதாக கோல்கட்டாவில் மில்லினியம் பூங்காவிற்கு வருகை தந்த மோடி, கோல்கட்டா துறைமுக அறக்கட்டளையின் 150 வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ரபீந்திர சேது (ஹவுரா பாலம்) இன் ஒத்திசைக்கப்பட்ட ஒளி மற்றும் ஒலி அமைப்பினை இன்று (ஜன.11) மாலை துவக்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜகதீப் தங்கரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tnt - chn,இந்தியா
12-ஜன-202014:31:05 IST Report Abuse
tnt மியூசியம் ஒன்றும் வெறும் காட்சி பொருள் அல்ல ...குழந்தைகள் மாணவர்கள் அங்கே நிறைய கற்றுக்கொள்வார்கள். வரலாறு நாம் படித்தது சரி இல்லை ... முகலாயர் பிரிட்டிஷ் இவர்களுக்கு கொடுத்த முக்கியம்...கரிகாலன், சோழன், சேரன், பாண்டியன், விஜயநகரம் இவர்களுக்கு ஏன் இடம் இல்லை....கண் மூடி தனமாக நான் மோடி எதிர்ப்பாளன் என்று பாராமல் ...நல்ல முயற்சிக்கு ஆதரவு வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
tamilan - channai,இந்தியா
12-ஜன-202008:14:07 IST Report Abuse
tamilan அருங்காட்சியகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி என்ன சார் ஆக போகுது. மக்களின் வாழ்வாதாரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துங்க ஐயா அது போதும். இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு அமைதியான வாழ்க்கை உருவாக்கி கொடுங்கள் அது போதும். அதை விட்டு வேண்டாத செலவுகள் செய்து பணத்தை படேல் சிலைக்கு சிலைக்கு செலவிட்டது போல் வீணடிக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
12-ஜன-202015:12:31 IST Report Abuse
M.SHANMUGA SUNDARAMஅருமையான கருத்து. இந்த மாதிரி கருத்து சொல்பவர்கள் இல்லாத காரணம் இவர்கள் இப்படி வாய்ச்சவடால் மற்றும் வெட்டி செலவுகள் செய்து வருகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜன-202022:05:39 IST Report Abuse
Sampath Kumar ஏங்க கீழடிக்கு ஏன்னா சொல்லுறீங்க சார்
Rate this:
Share this comment
12-ஜன-202000:26:05 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...)நீ இப்படி பொலம்பியே சீக்கு வந்து சாக போறன்னு மட்டும் தெரியுது......
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-ஜன-202009:36:13 IST Report Abuse
ஆரூர் ரங்கீழடி சரியாக விசாரிக்க கமிஷன் அமைக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X