பொது செய்தி

தமிழ்நாடு

சிறு வயது முதல் சிக்கனமாக வாழ்கிறேன்!

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த, 80ம் ஆண்டுகளின் கதாநாயகிகளில் ஒருவரான, நடிகை ஸ்ரீபிரியா: பாரம்பரிய இசைக் குடும்பத்தை சேர்ந்தவள் நான். பெற்றோர், பரத நாட்டிய ஆசிரியர்கள். என் அக்கா, தம்பிக்கும் இசை, நடனம் மீது தான் அதிக ஆசை. ஆங்கில வழியில் படித்ததால், நடிக்க வந்த புதிதில், சரியாக தமிழ் பேசி, நடிக்க தெரியாது. தமிழ் உச்சரிப்பு, நடிப்பு, டான்ஸ் என, பல விஷயங்களை, நடிகர் கமலிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

அதனால் தான், நண்பர் என்பதை விடவும், ஆசிரியர் என, அவரை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கண்ணதாசன், கருணாநிதி, வாலி ஆகியோரிடமும், தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழில் எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும், கவிஞர் முத்துகுமாரிடம் தான் கேட்பேன். அவர் மறைவுக்கு பின், கமலிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.நான், கமல், ரஜினி மூவரும் சினிமாவில் ஒரே காலகட்டத்தில், ஒன்றாகவே வளர்ந்தோம். மூவரும் ஒரே இடத்தில் இருந்தால், அங்கு செம ரகளை தான். ரஜினியுடன் சேர்ந்து, 30 படங்கள், கமலுடன், 25 படங்களில் நடித்துள்ளேன். ரஜினி, கமலின் வெற்றி சரித்திரத்தை யாரும் எழுத முற்படும் போது, என்னை நீக்கி விட்டு எழுத முடியாது. அந்த அளவுக்கு, இருவருடனும் நடித்துள்ளேன்.

அதுபோல, சிவகுமார் உடன், 15 படங்களில் நடித்துள்ளேன்.இருவருக்கும் சின்ன மனஸ்தாபத்தால், பேசிக் கொள்ளாமல் இருந்தோம். எனினும், அப்படியே, 10 படங்களில் நடித்தோம். அதன்பின், இருவரும் பேசி, நண்பர்களாகி விட்டோம். சிவாஜி, ஜெய்சங்கர் ஆகியோருடனும், அதிக படங்களில் நடித்த நடிகையரில் நானும் ஒருத்தி.மலையாள நடிகராக இருந்த ராஜ்குமார் தான் என் கணவர்.

இப்போது அவர், பிசினஸ் செய்கிறார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். மகள், சட்டம் படித்துள்ளாள்; மகன், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிக்கிறான். குடும்ப சூழலால், இளமை காலத்தில் இருந்தே, சிக்கனமாக வாழ பழகி விட்டேன்; இப்போதும் கடைபிடிக்கிறேன். சினிமா வாய்ப்புக்காக, யாரையும் நான் அணுகியதில்லை. வாழ்க்கையில் எப்போதும், பெரிய எதிர்பார்ப்புகள் இருந்ததில்லை; அதனால், ஏமாற்றமும் கிடைத்ததில்லை.

சினிமா துறை உட்பட எந்த துறையிலும், பெண்களுக்கு இன்னமும் உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. மக்களை பாதிக்கும் விஷயங்களுக்காக, இப்போதும் தைரியமாக குரல் கொடுக்கிறேன். 'சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு, கட்டுப்பாடுகள் வேண்டும். 'ஆதார் எண் போன்றவற்றை குறிப்பிட்ட பிறகே, சமூக வலைதளங்களை பயன்படுத்த, சட்டம் கொண்டு வர வேண்டும்' என்பதை வலியுறுத்தி வருகிறேன்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-202010:57:43 IST Report Abuse
Bhaskaran அப்படியே நடிகர் கார்த்திக்குடன் ஊர் சுற்றி பின் பெரிய தகராறு செய்ததையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே அக்கா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X