சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'உரத்த குரலில் தைரியமா பேசுறாரே!'

Added : ஜன 11, 2020
Advertisement
 'உரத்த குரலில் தைரியமா பேசுறாரே!'

ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட புறநகர் பகுதியில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வந்தார். பின், உடுமலையில் நிருபர்களிடம் அவர், 'தமிழகத்தில், சமீபகாலமாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. கோவை, திருப்பூர் பகுதியில், வங்கதேச பயங்கரவாதிகள் அமைதியை குலைக்க திட்டமிட்டுள்ளனர்.

உளவுத் துறையிடம், இது குறித்து பல முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம், களியக்காவிளையில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன் கொல்லப்பட்டுள்ளார். சர்வதேச பயங்கரவாதிகளின், 'நெட்வொர்க்' இந்தியாவிலும் ஊடுருவி வருவதை, உளவுத் துறையினர் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றெல்லாம் அ.தி.மு.க., அரசு பீற்றிக் கொண்டுள்ளது.

ஆனா, காடேஸ்வரா தைரியமாக, தமிழகத்திலும் பயங்கரவாதம் தலை துாக்கியுள்ளது என, பேசுகிறாரே' என, கமென்ட் அடிக்க, மற்ற நிருபர்கள் அதை தலையசைத்து ஆமோதித்தனர்.


'மிரட்டாம இருந்தாரே எம்.எல்.ஏ., மூர்த்தி!'


கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா, தேர்தல் அலுவலர் முருகானந்தம் முன்னிலையில், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
நடந்தது. அவர்களுக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி பொன்னாடை அணிவித்தார். அதிகாரிகளுக்கும், அவர் அணிவிக்க சென்ற போது சற்று தயங்கினர். அப்போது மூர்த்தி, 'பயப்படாம வாங்க... தி.மு.க.,க்கு, மொத்தமுள்ள உறுப்பினர்களில், 18ல், 14 பேர் இருக்காங்க; அந்த வகையில், 'புல்' மெஜாரிட்டி இங்கு இருக்கு' என்றார். பின், அதிகாரிகள் முன் வர, அவர்களுக்கும் மூர்த்தி மாலை அணிவித்தார்.

இதை கவனித்த அலுவலக ஊழியர் ஒருவர், 'பயப்படாம வாங்கன்னு, மூர்த்தி சொன்ன வரைக்கும் பரவாயில்லை. 'அடுத்து எங்க ஆட்சி தான் வரும்... பாத்துக்குங்க...' என, தி.மு.க., பாணியில் மிரட்டல் விடலியே... தப்பித்தோம்' எனக்கூற, மற்றவர்கள் தலையை குனிந்து மவுனமாக கலைந்தனர்.


'காங்., நிலைமை கார்த்திக்கு புரிந்திருக்குமே!'


காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, தன் சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, காங்., தம் கருத்தை தெளிவாக கூறி விட்டது. டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களை தாக்கியோர் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை; ஆனால், தாக்குதல் நடத்தியோர், பா.ஜ., ஆதரவாளர்கள். 'தேர்தல்களில் இயந்திரம் வாயிலாக, ஓட்டளிப்பது தான் சிறந்தது. அ.தி.மு.க.,விடம் அதிகாரம் இருந்தும், உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீதத்திற்கு மேல், தி.மு.க., -- காங்., கூட்டணி வென்றுள்ளது.

தமிழக அரசுக்கு, இது சரிவு தான். உட்கட்சிக்குள் பிரச்னை, போட்டி இருந்தால் தான் ஆரோக்கியமான அரசியல் உருவாகும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X