சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பினராயியிக்கு விழுந்த, 'வேட்டு!'

Added : ஜன 11, 2020
Advertisement
 பினராயியிக்கு விழுந்த, 'வேட்டு!'

கேரளாவில், வலது கம்யூனிஸ்டுகளுக்கும், மார்க்., கம்யூ.,க்களுக்கும் சண்டை தொடர்ந்தபடி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த பினராயி விஜயன் தான். சமீபத்தில், கேரளாவின் நிலச் சீர்த்திருத்தச் சட்டம் அமலாகி, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, விழா ஒன்று நடந்தது. வழக்கம் போல, முதல்வர் என்ற முறையில், பினராயி விஜயன் தலைமை வகித்தார். மேடையில், கம்யூ., தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.

இந்தச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர், வலது கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முன்னாள் முதல்வரான அச்சுத மேனன். சட்டத்தால் ஏற்பட்ட மாநில வளர்ச்சி பற்றிப் பேசிய பிறகு, சட்டம் உருவாகக் காரணமாக இருந்த மற்ற தலைவர்கள் பெயரை எல்லாம் குறிப்பிட்டுப் புகழ்ந்து பேசினார் விஜயன். ஆனால், அச்சுத மேனன் பெயரை, வேண்டுமென்றே தவிர்த்து விட்டார். மேடையில் அமர்ந்திருந்த வலது கம்யூ., தலைவர்களுக்கு, 'செம' கடுப்பு. 'வரட்டும் நம்ம நேரம்...' எனக் காத்திருந்து, 'மைக்' கிடைத்ததும், கன்னம் ராஜேந்திரன் என்ற தலைவர், பினராயியை, 'ரைட் அண்டு லெப்ட்' பின்னிப் பெடலெடுத்து விட்டார்.

விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி ஏற்பட்டாலும், மறுபக்கம், 'வேணும் இந்த பினராயியிக்கு... வில்லங்கமா பேசியே கட்சியில பெரியாளா ஆயிட்டாரு... இப்ப முதல்வரா வேற இருக்காரு... தலை கனம் தாங்கலே... இப்படி ஒன்றிரண்டு பேர், 'கொடுத்தால்' தான், இவர் வழிக்கு வருவார்...' என, 'கப்சிப்' காத்து, கன்னம் ராஜேந்திரனின் பேச்சை, அமைதியாகக் கேட்டு முடித்து, கை தட்டினர்!


ஜாவடேகரின் சாமர்த்திய பேச்சு!


மத்திய, பா.ஜ., அரசில் ஒன்றிரண்டு பேரைத் தவிர, பெரும்பாலானோருக்கு, நாசுக்காகப் பேசத் தெரியாது. விபரீதமான கருத்துக்களை வெளியிட்டு, வம்பை வாங்கிக் கட்டிக் கொள்வர்; பக்குவம் அற்றவர்களாக உள்ளனர். மோடி, அமித் ஷா, ஜாவடேகர், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட சிலர் தான், எந்தப் பிரச்னை வந்தாலும், அதிகம், 'டென்ஷன்' அடையாமல், நாசுக்காகப் பேசத் தெரிந்தவர்கள். ஜாவடேகரின் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், அவர், தன் சாமர்த்தியப் பேச்சை வெளிக்காட்டினார்.

இந்திய மாநிலங்களின் வனம் பற்றிய அறிக்கையை டில்லியில் அவர் வெளியிட்டார். வனத் துறை அமைச்சராக உள்ளதால்,
நிருபர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் புள்ளி விவரங்களை அள்ளி வீசினார். இந்தியாவின் வனப் பகுதி, இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்பதை, 'டிஜிட்டல்' வரைபடம் வைத்துக் காண்பித்தார். அப்போது, காஷ்மீரைத் தாண்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் அதில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. உடனே நிருபர்கள், 'இந்தியாவைப் பற்றி தானே விளக்குகிறீர்கள். எதற்கு பாகிஸ்தான் பகுதியை வரைபடத்தில் வைத்துள்ளீர்கள்?' எனக் கேட்க, 'சாட்டிலைட் மேப்புக்கு, இந்திய எல்லை, பாகிஸ்தான் எல்லைன்னு பிரிக்கத் தெரியாதே...' எனக் கூறி, வாயிலிருக்கும் பற்கள் அனைத்தும் தெரிவது போல் சிரித்தார். இந்த பதிலை எதிர்பார்க்காத நிருபர்களும், 'குபீர்' சிரிப்பு சிரித்தனர். 'டென்ஷன்' அடையாமல், விவகாரத்தை எளிதுபடுத்திய ஜாவடேகரின் சாமர்த்தியத்தைப் பார்த்து, அதிகாரிகளும் சிரித்தனர்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X