இதே நாளில் அன்று

Added : ஜன 11, 2020
Advertisement
 இதே நாளில் அன்று

ஜனவரி, 12, 2000
இரா.நெடுஞ்செழியன்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருக்கனாபுரத்தில், 1920 ஜூலை 11ல் பிறந்தார். தி.க.,வில் இருந்து பிரிந்து, அண்ணாதுரை, தி.மு.க., துவங்கியபோது, அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில், ஒருவராகத் திகழ்ந்தார். அண்ணாதுரையின் மறைவிற்குப் பின், தி.மு.க., பொதுச் செயலராகப் பதவி வகித்தார். பின், தி.மு.க.,வில் இருந்து பிரிந்து, மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் துவங்கினார்.

சிறிது காலத்திலேயே அக்கட்சியை, அ.தி.மு.க.,வோடு இணைத்தார்; அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராகவும் சில காலம் இருந்தார். அண்ணாதுரை இறந்த பின், 1969 பிப்ரவரி, 3 முதல், 1969 பிப்ரவரி 10 வரையும், எம்.ஜி.ஆர்., இறந்த பின், 1987 டிசம்பர், 24 முதல், 1988 ஜனவரி, 7 வரையும், தமிழக இடைக்கால முதல்வராக இருந்தவர்.

அவர் மறைந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X