காங்கிரஸ் தான் காரணம்

Added : ஜன 11, 2020
Advertisement
காங்கிரஸ் தான் காரணம்

மத்திய அரசு மீது பழி சுமத்த எந்த பிரச்னையும் இல்லாததால், குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, காங்., தவறான தகவலை பரப்பி வருகிறது. அதனால், நாட்டில் வன்முறை தலைதுாக்கி உள்ளது. இதற்கு காங்., தான் காரணம். குடியுரிமை திருத்த சட்டம், மக்களின் குடியுரிமையை பறிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. அகதிகளாக வருவோருக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டம் அது. இதை, பா.ஜ., தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூற வேண்டும்.

அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

கேரள அரசு செய்தது சரியல்ல

குடியுரிமை திருத்த சட்டம், பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதை மதிக்காமல், கேரள அரசு, பத்திரிகைகளில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விளம்பரம் வெளியிட்டுள்ளது. இது, முற்றிலும் விரும்பத்தகாத செயல். பொதுமக்களின் வரிப்பணத்தை, அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது சரியல்ல. அந்த விளம்பரத்தை, மா., கம்யூ., கொடுத்து இருந்தால் இந்த கேள்வியே எழாது. கேரள அரசு கொடுத்தது சரியல்ல.

ஆரிப் முகமது கான், கேரள கவர்னர்.

பள்ளிகளில் மராத்தி கட்டாயம்

மஹாராஷ்டிராவில், ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் ஆங்கிலத்தில் நன்கு பேசுகின்றனர். ஆனால், மராத்தியில் அவர்களால், எழுதவும், படிக்கவும் முடியவில்லை. அதனால், அனைத்து பள்ளிகளிலும்,10ம் வகுப்பு வரை, மராத்தியை கட்டாய பாடமாக்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது

அஜித் பவார், மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X